KOLNews

இதை செய்தால் பணம் மிச்சம்..!

புது வருட தீர்மானமாக,  ஏற்கனவே உள்ள கெட்ட  பழக்கத்தை ஒழிப்பதை விட, நல்ல விஷயம் ஒன்றை புதிதாக பின்பற்ற முயன்றால் அது சாத்தியமாகும் வாய்ப்பு அதிகம். அந்த வகையில் செய்யப்படும் தீர்மானம், நம்மை மட்டுமல்லாமல், நம் குடும்பத்தையும் காப்பதாக இருந்தால் அது இன்னும் நல்லது. பெண்களுக்கு அது சாத்தியமான ஒரு விஷயம் தான். குறிப்பாக செலவுகளை குறைக்க கஞ்சத்தனமாக இருக்காமல், வேண்டாத செலவுகளை மட்டும் எப்படி கட்டுப்படுத்துவது என புரிந்து கொண்டு அதனை கடைபிடித்தால், அடுத்த வருட ஆரம்பத்தில் நீங்கள் எவ்வளவு பணத்தை மிச்சப்படுத்தியுள்ளீர்கள் என்பதை பார்த்து ஆச்சரியப்படுவீர்கள். 

அந்த வகையில், நாம் அன்றாடம் உபயோகிக்கும் மளிகை பொருட்களில் இருந்து ஆர்மபிபோம்..

Laxmi Provision And General Store Ahmednagar | Best Bath Soap Dealers in  Ahmednagar | Pepsi Soft Drink Retailers Ahmednagar | JCM Bazar

மளிகைப் பொருட்களை சிறுகச் சிறுக வாங்காமல் , ஒரு மாதத்துக்கு தேவையானவற்றை மொத்தமாக வாங்குவது நல்லது . அதற்கு முன், சமையல் அறைக்குள் சென்று என்னென்ன பொருள்கள் தேவை ? என்பதை கவனித்து  பட்டியல் போடலாம் . முந்தைய மாதத்தில் வாங்கிய பொருட்களில் ஏதேனும் மீதம் இருந்தால் , இந்த மாதம் வாங்க இருக்கும் பொருட்களின் அளவைக் குறைத்துக் கொள்ளலாம் . அடிக்கடி சமைக்கும் உணவுகளுக்குத் தேவையான பொருட்களை மட்டும் அதிகமாக வாங்கிக்கொண்டு . மற்றவற்றைக் குறைத்துக் கொள்வது சிறந்தது . 

Easyday Club, Gola Gokaran Nath, Lakhimpur - magicpinகுறிப்பாக டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் வாங்க சென்றால், அதன் அமைப்பு உங்களுக்கு தேவையானவற்றை வெளிப்படுத்துவதுடன், உங்களுக்கு ஆசையை தூண்டி அத்தியாவசியம் இல்லாதவற்றையும் சேர்த்து வாங்க வைத்துவிடும். ஆகவே முடிந்த வரையில், உங்களுக்கு நன்கு பழக்கப்பட்ட மளிகை கடைகளிலேயே வாங்குங்கள்.

பண்டிகை காலங்களில் தேவைக்கு ஏற்றவாறு மளிகைப் பொருட்கள் வாங்குவது பணத்தை சேமிக்க உதவும் . மளிகைப் பொருட்களுக்கான பட்ஜெட் போடும் போது , காய்கறிகள் , பழங்கள் , இறைச்சி போன்ற வற்றுக்கும் சேர்த்து பணம் ஒதுக்க வேண்டும் .

Discount Images | Free Vectors, Stock Photos & PSD

எத்தனை சதவீத ' தள்ளுபடி ' ஆனாலும் தேவையில்லாதவற்றை வாங்காதீர்கள் . அந்தந்த சீசனுக்குரிய காய்கறிகள் , பழங்களை வாங்கினால் விலை குறைவாக இருக்கும் . பணமும் மிச்சமாகும் . காய்கறிகளை மொத்தமாக வாங்கி வைத்து வீணாக்காமல் , என்ன சமைக்கலாம் என்ற திட்டமிடுதலோடு , வாராவாரம் வாங்கினால் பணத்தை சேமிக்கலாம் . 

அதே போல, மளிகைப் பொருட்களை பட்டியல் போடுவதற்கு முன்பு , குடும்பத்தினரிடம் கலந்தாலோசிப்பது நல்லது . உணவுக்கட்டுப்பாடு மேற்கொள்பவர்கள் , தாங்கள் முக்கியத்துவம் கொடுக்கும் உணவுகளுக்கு ஏற்றவாறு மளிகைப் பட்டியல் தயார் செய்யலாம் . 

10 Easy vathal | vadam | Vadagam Recipes - Prema's Culinary

தொடர் மழை மற்றும் ஊரடங்கு காலத்தில் காய்கறிகள் விலை உச்சத்தில் இருக்கும். இவற்றை சமாளிக்க முன் கூட்டியே வத்தல், வடாம் ஊறுகாய் போன்ற வெகு நாட்கள் வரை பயன்படுத்தக்கூடியவற்றை தயாரித்து இருப்பு வைத்து கொள்ளலாம். 

English Summary

Doing this will save you money ..!

Latest Articles

KOLNews