KOLNews

உங்களுக்கென ஒரு வழக்கறிஞர் இல்லையா..?

நான் எந்த வம்புதும்புக்கும் போகமாட்டேன்..எனக்கு எதுக்கு வக்கீல் ..? என நீங்கள் நினைத்தாலும், உலகம் உங்களை அவ்வளவு எளிதாக வாழ விடாது.

சிக்கல் பிரச்னை என்பது எந்த வகையிலும் எந்த நேரத்திலும் உங்களுக்கு வராமல் இருந்தால் கூட, எதிர்காலத்தில் உங்கள் வாரிசுகளுக்கும் அவை வரக்கூடாது என நீங்கள் நினைத்தால், உங்களுக்கான ஒரு நல்ல வழக்கறிஞரை கண்டறிந்து வைத்துக்கொள்வது அவசியம்.

வாழ்க்கையின் கடினமான சூழ்நிலையிலிருந்து உங்களை காப்பாற்றுவதற்கு சட்ட உதவி இன்றியமையாததாக இருக்கும்.

இந்த பிரச்சனனைக்கு கோர்ட் வரைக்கும்  போகவேண்டுமா ..? என்கிற அளவில் உங்களை சிந்திக்க வைக்கும் ஒரு பிரச்னை வந்தால், நீங்கள் கோர்ட்டுக்கு போகவேண்டாம். ஆனால் ஒரு வழக்கறிஞரை பார்த்து ஆலோசிப்பது நல்லது. ஏன் என்றால் உங்களை போலவே உங்கள் எதிர்தரப்பு நபர் சிந்திப்பார் என சிலசமயங்களில் உறுதியாக  கூறமுடியாது.

இயல்பாக உங்கள் வாழ்வில் கடந்து போகும் சில நிகழ்வுகள், இயல்பாகவே கடந்து போக கூட ஒரு சட்ட ஆலோசனையை பெறுவது நல்லது.

குறிப்பாக

1.  வீடு வாங்குதல் -

8 Important Documents that Need To Be In Your Home Buying Processசில நாடுகளில், உங்கள் சொந்த வீட்டை வாங்குவதற்கு ஏற்பாடு செய்து, வழக்கறிஞர் இல்லாமல் ஆவணங்களைச் செய்வது முற்றிலும் சட்டப்பூர்வமானது. ஆனால் 100 சதம் சிக்கல் இல்லாத ஒன்றை தன் வாரிசுகளுக்கு வழங்கி செல்ல வேண்டும் என நினைப்பவர்கள் சட்ட ஆலோசனை பெறுவது அவசியம்.

ஏன் எனில், சொத்து பரிவர்த்தனைகளில் உங்களால் உண்மையில் ஒரு சட்டத்திற்கு உட்பட்ட  ஆவணத்தை முழுமையாக புரிந்து கொள்ள முடியுமா?

சொத்தை வாங்குவதற்கான நோக்கம் என்று உங்கள் மனதில் ஒன்று இருக்கும். நீங்கள் அதனை மட்டுமே நினைத்து பத்திரங்களை சரிபார்க்கும் போது முக்கியமான ஒன்றை தவறவிடுவது சகஜமான ஒன்று.

சொத்தை வாங்கிய பின், சே ..இதை கவனிக்கவில்லையே..! என புலம்ப அவசியம் இருக்காது.

சட்டப்பூர்வமாகப் பயிற்சி பெற்றவர்கள் இந்த செயல்முறையை மிக விரைவாகச் செய்வைத்தால் உங்கள் பொன்னான நேரமும் மிச்சப்படும்.

நீங்கள் செய்யும் மிகப்பெரிய பரிவர்த்தனைகளில் ஒன்றாக ஒரு சொத்தை வாங்குவது அல்லது விற்பது இருக்கலாம்,ஆகவே சட்ட அலையோசனை கடமையாக செய்யாமல், சரியானவற்றை தேர்வு செய்யும் வாய்ப்புகளை உருவாக்கும் ஒன்றாக சட்ட ஆலோசனையை கருதுங்கள்.

2, விவாகரத்து  -

Divorce or Khula Procedure For Overseas Pakistanis - Hamza and Hamzaநம் நாட்டிலும் தம்பதிகள் மணமுறிவு ஏற்பட்டு விவாகரத்து பெறுவது அதிகரித்து வரும் நிலையில்,

நீங்கள் விவாகரத்து பெறுகிறீர்கள் என்பதில் 100% உறுதியாக இல்லாவிட்டாலும், உங்கள் திருமணம் முறிந்தால் சட்ட உதவியை நாட வேண்டியது அவசியம்.  இங்கு சட்ட ஆலோசனை என்பது விவாகரத்தை பெறுவதற்கு என பார்க்காமல், அதனை தவிர்க்க கூட பயன்படும் என்பதை உணரவேண்டும்.

3. உயில் எழுதும் போது -

Will In The Digital Age: Legal Requirements And Safeguards To Be Ensured  For Enforcementஉயில் என்பது உங்களின் இறுதி விருப்பங்களின் தொகுப்பாகும், ஆனால் சட்டச் சிக்கல்களால்  சமயத்தில்  அந்த உயில் செல்லாது என அறிவிக்கப்படும் சூழல் ஏற்பட்டு,உங்கள் விருப்பம் நிறைவேறாமல் போகலாம், ஆகவே, உங்கள் விருப்பம் சட்டப்பூர்வமாக பிணைக்கப்பட்டுள்ளதை  உறுதிப்படுத்திக் கொள்ள

சட்ட ஆலோசகர்கள் யாராவது உங்கள் பக்கத்தில் இருப்பது உங்களுக்கு மட்டுமல்ல உங்கள் வாரிசுகளுக்கும் நல்லது.

4. காப்பீடு பலன் - 

Filing insurance claims, do you know your deductible?நீங்கள் செய்த காப்பீடுகளின் பலன் உங்கள் குடும்பத்தாரை சென்று செல்லும் வகையில், அவற்றை குறித்த விஷயங்களிலும் சட்ட ஆலோசனை பெறுவது முக்கியம்.

ஆக, சட்ட ஆலோசனை என்பது அதை அணுகும் போது செலவாக தோன்றினாலும், அது பிற்காலத்தில் ஏற்படக்கூடிய இழப்புகளை சரிசெய்யும் என்பதால் அது பணத்தை மிச்சப்படுத்தும் ஒன்று தான்.

ஆதலினால் நீங்களும் தேடுங்கள் ஒரு நல்ல வழக்கறிஞரை.

English Summary

Don't you have a lawyer?

Latest Articles

KOLNews