KOLNews

நைசாக.. இந்திய எல்லைக்குள் வந்த டுரோன்..! - தொடரும் பாகிஸ்தானின் சில்மிஷம்..!

எல்லை பாதுகாப்பு படை,  இந்திய எல்லைக்குள் உள்ள பஞ்சாப் பகுதியில் பாகிஸ்தானை சேர்ந்த டுரோன் பறந்ததாக தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தற்போது அங்கு ரோந்து பணி தீவிரப்படுத்தப்பட்டதுடன், உயர் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Image result for Drone into Indian area .. - Continued Pakistan plays !

அக்டொபேர் 7 அன்று, இரவு நேரத்தில் இந்தியாவின் பஞ்சாப் மாநிலம் பெரோஷ்பூரின் ஹதுசைன்வாலா எல்லை பகுதியில், பாகிஸ்தானுக்கு சொந்தமான டுரோன் ஒன்று, பறந்து கொண்டிருந்தது. இரவு 10 முதல் 10.40 மணிக்குள் பல முறை பறந்த இந்த டுரோன், 12.15 மணியளவில், இந்திய எல்லையை தாண்டி வந்தது.

இந்நிலையில்  இதனையறிந்து உஷாரான எல்லை பாதுகாப்பு படையினர் , உயரதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். இதனையடுத்து பஞ்சாப் போலீசார், உளவுத்துறையினர், பிஎஸ்எப் வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர்.

மேலும், இந்த டுரோன் மூலம் பயங்கரவாதிகளுக்கு, ஆயுதம் வழங்க முயற்சியாக இருக்குமோ.? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏற்கனவே அண்மையில், டுரோன்கள் மூலம், பாகிஸ்தான் ஆயுதங்களை வீசி விட்டு சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த மாதம் ஒரு டுரோன் இவ்வாறு செய்ததை பிஎஸ்எப் வீரர்கள் கண்டறிந்தனர் அதே போல மற்றொரு டுரோன் எரிந்த நிலையில் கண்டெடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

English Summary

Drone into Indian area .. - Continued Pakistan plays !

Latest Articles

KOLNews