'வாந்தியும் பேதியும் வந்தவர்க்கு தான் தெரியும்' என்கிற சொல்லாடலை, ஒருவர் தங்களின் கஷ்டத்தை பிறருக்கு உணர்த்த கூறுவதை பார்த்திருப்போம். அவ்வளவு சோர்வை கொடுக்கும் இந்த உபாதைகளில் சீதபேதி என்பது உடனே கட்டுக்குள் கொண்டு வர வேண்டிய ஒன்று. ஆனால் இதனை வீட்டில் உள்ள அஞ்சறைப்பெட்டியில் இருக்கும் வெந்தயத்தை கொண்டே கூட தீர்க்கலாம்.

செய்முறை -
வெந்தயத்தை கழுவி எடுத்துக் கொள்ளவும் . ஒரு மண் சட்டியில் போடவும் . இளம் வறுவலாக வறுத்து எடுக்கவும் ஆறவிடவும் . ஆறியதும் நன்றாக இடித்துக் கொள்ளவும் . இடித்ததை 50 கிராம் வெல்லத்தில் பிறைந்து கொள்ளவும் பிசைந்ததை நான்கு பங்காக்கிக் கொள்ளவும் .
பயன்படுத்தும் முறை - காலை ஆறு மணி முதல் மாலை ஆறு மணிக்குள் நான்கு முறைகள் கொடுக்கவும் . சிலருக்கு ஒரு நாளில் குணமாகும் . சிலருக்கு இரண்டு நாட்களில் குணமாகும் . ஒவ்வொரு நாளும் மருந்தைப் புதிதாகச் செய்து உட்கொள்ள வேண்டும் . குறிப்பு சீதபேதியின் போது தயிரும் சோறுமே ஏற்ற உணவாகும் .
English Summary
Easy Remedy for Amoebiasis ..!