KOLNews

ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி கணக்கை புதுப்பிக்க, ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்..!

ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) , இந்தியாவெங்கும் உள்ள ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதியை நிர்வகிப்பில் புதிய விதியை முன்னெடுத்துள்ளது. அதாவது ஊழியர்கள் தங்களது யுனிவர்சல் அக்கோன்ட  நம்பர் என சொல்லப்படும் UAN எண்ணை ஆதார் அட்டை யுடன் இணைத்து, வருங்கால வைப்பு நிதி கணக்கை பராமரிக்கவேண்டும் என்பதை கட்டாயமாகியுள்ளது. 

இதன் மூலம், ECR என சுருக்கமாக சொல்லப்படும் மின்னணு ரசீது மற்றும் ரிட்டர்ன் ( ELectronic Challan cum Return) சமர்பிப்பதில், சமூக பாதுகாப்பு குறியீடு (Social security code) 20202 சட்டத்தின் பிரிவு 142 இன் புதிய மாற்றங்களை கொண்டு வருகிறது.

இது தொடர்பாக அண்மையில் EPFO  தனது ட்விட்டர் பதிவில், 'UAN எண்ணை ஆதார் அட்டை யுடன் இணைத்த ஊழியர்கள் மட்டுமே ECR ரை சமர்ப்பிக்க முடியும். UAN எண்ணை ஆதார் அட்டையுடன் இணைத்து தங்கள் கணக்கை புதுப்பிக்காத்தவர்கள், தனியாக சமர்ப்பிக்கவேண்டும்,. அவர்கள் பின்னர் சொல்லப்படும் தேதியில் தங்களது UAN எண்ணை ஆதார் அட்டையுடன் இணைக்க வேண்டும்' என தெரிவித்துள்ளது. 

English Summary

Employees need to link the Aadhaar number to renew their EPF account ..!

Latest Articles

KOLNews