KOLNews

புல்வாமாவில் என்கவுண்டர் ..! - 3 தீவிரவாதிகளை 'போட்டு தள்ளி'ய பாதுகாப்பது படையினர்

ஆகஸ்ட் 21,  ஜம்மு காஷ்மீரின் புவ்வாமா மாவட்டத்தில் நடைபெற்ற என்கவுண்டர் தாக்குதலில் , 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டதாக காஷ்மீர் போலீசார் தெரிவித்துள்ளனர் . 

முன்னதாக ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோரா அருகே உள்ள வனப்பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு கிடைத்த தகவலின் பேரில், , பாதுகாப்பு படையினரும் உள்ளூர் போலீசாரும் அந்த பகுதியில் சோதனையை மேற்கொண்டனர்  . 

அப்போது , திடீரென அங்கு பதுங்கியுருந்த தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட தொடங்கினர் . இதையடுத்து , பாதுகாப்பு படையினர் கொடுத்த பதில் தாக்குலில் ஜெய்ஷ் - இ - முகமது இயக்கத்தை சேர்ந்த 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர் . 

சம்பவத்தையடுத்து, பாதுகாப்பு படையினர் தொடர்ந்து அந்த பகுதியில் தேடுதலில் ஈடுபட்டுள்ளனர் . கடந்த 24 மணி நேரத்தில் புல்வாமா பகுதியில் நடந்த 2 வது என்கவுண்டர் இது என்பது குறிப்பிடத்தக்கது.  

English Summary

Encounter in Pulwama ..! - Troops killed 3 militants

Latest Articles

KOLNews