KOLNews

வேறு உறவு இருந்தாலும் ..நல்ல தாயாக இருக்க முடியும்..! - ஹரியானா உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு

பஞ்சாப் ஹரியானா உயர்நீதிமன்றத்தில், ஆஸ்திரேலியாவில் தனது கணவரின் பராமரிப்பில் உள்ள நான்கரை வயது மகளை , தாய் ஆகிய தானே வளர்க்க உரிமை கோரி ,ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார், ஃபதேஹகர சாஹிப் மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவர் , 

இந்நிலையில்,  இந்த மனு நீதிபதி அனுபிந்தர் சிங் கிரிவால் முன் விசாரணைக்கு வந்தது 

அப்போது , அப்பெண்ணுக்கு திருமண பந்தத்தை மீறிய  உறவு உள்ளதாகவும் , எனவே அவரிடம் குழந்தையை ஒப்படைக்க கூடாது எனவும் , அப்பெண்ணின் கணவர் தரப்பில் வாதிடப்பட்டது . 

இருப்பினும், இதனை ஏற்க மறுத்த நீதிபதி,  ஒரு பெண்ணுக்கு திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவு உள்ளதை வைத்து, அவர் ஒரு நல்ல தாய் அல்ல எனக் கூற முடியாது என தெரிவித்தார் . அத்துடன , இந்த ஒரு காரணத்திற்காக , அவருக்கு குழந்தையின் பாராமரிப்பை வழங்கக்கூடாது என்ற முடிவை எடுக்க முடியாது என்றும், ஆணாதிக்க சமூகத்தில் பெண்ணின ஒழுக்கம் குறித்து குற்றம் சாட்டப்படுவது தொடர்ந்து நடைபெற்று வருவதாகத் கவலை தெரிவித்த நீதிபதி , குழந்தையின் பராமரிப்பை தாய்க்கே வழங்க வேண்டுமெனத் தீர்ப்பளித்தார்.

English Summary

Even if there is another relationship..can be a good mother ..! - Judgment of the Haryana High Court

Latest Articles

KOLNews