KOLNews

விவசாயி உயிரிழப்பு..! - டெல்லி பேரணியில் துயரம்

இன்று தலைநகர் டெல்லியில் நடைபெற்ற விவசாயிகளின் போராட்டத்தில், போலீசார் நடத்திய  தாக்குதலில், விவசாயி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தது, தற்போது அங்கு பதற்றத்தை அதிகரிக்கசெய்துள்ளது.

முன்னதாக சிங்கு எல்லையில் இருந்து, சஞ்சய் காந்தி டிரான்ஸ்போர்ட் நகருக்குள் நுழைந்த விவசாயிகள் மீது காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். அத்துடன், போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது, போலீசார் தடியடி நடத்தினர். இந்த போராட்டத்தில் படுகாயமடைந்த நவ்நீத் என்ற விவசாயி, போராட்டக்களத்திலேயே மரணமடைந்தார். உயிரிழந்த விவசாயியின் உடல் மீது தேசியக்கொடி போர்த்தி, விவசாயிகள் அஞ்சலி செலுத்தினர்.

போராட்டம் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, டெல்லியின் பல்வேறு இடங்களில் இணையை சேவையை துண்டித்து, மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. அத்துடன் மெட்ரோ ரயில் போக்குவரத்தையும் தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

English Summary

Farmer killed ..! - Tragedy at the Delhi rally

Latest Articles

KOLNews