கடந்த செப்டம்பரில் 3 வேளாண் சட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றிய நிலையில், இந்தச் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப் , அரியானா மாநில விவசாயிகள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
முன்னதாக கடந்த 13ஆம் தேதி விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் உடன மத்திய அரசு தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் விவசாயிகள் தரப்பில் இருந்து கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன அந்தக் கோரிக்கைகளை நிறைவேற்ற படாததால் ஏற்கனவே திட்டமிட்டபடி பஞ்சாப், அரியானா, உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் ஏராளமானோர் டிராக்டர்களில் நேற்று முன்தினம் டெல்லி நோக்கி புறப்பட்டனர்.
முதல்நாள் பேரணியில்அரியானா மாநில எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்ட விவசாயிகளுக்கும் போலீசாருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. அப்போது போலீஸ் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் கூட்டத்தை கலைக்க முயன்றது. அத்துடன் இது தொடர்பாக 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் கைது செய்தது.
இரண்டாம் நாளான நேற்றும் அரியானா போலீசாரின் தடுப்புகளை மீறி பஞ்சாப் விவசாயிகள் டெல்லியை நோக்கி முன்னேறினர். இதையடுத்து நேற்று காலை போலீசாருக்கும் அவர்களுக்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது .அங்கு பதற்றம் உருவானது. அதையடுத்து நிலைமையை சமாளிக்க வேறுவழியின்றி விவசாயிகள் அப்பகுதியை கடந்து செல்ல போலீசார் அனுமதி வழங்கினர. அத்துடன் அவர்கள் டெல்லி செல்லவும் அனுமதி வழங்கப்பட்டது. டெல்லியின் திகிரி எல்லைப் பகுதியில் விவசாயிகள் சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். அவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். தண்ணீர் பீச்சி அடித்து விரட்டினர்.
English Summary
Farmers gather in Delhi! - Police fighting to disperse the protest.!