KOLNews

விவசாயிகள் vs புதிய வேளாண் சட்டம்..! பேச்சுவார்த்தை நடத்துவதற்கான குழு அமைத்தது உச்சநீதிமன்றம்

நேற்று, மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கும் இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில், இதுதொடர்பான விசாரணை  நீதிபதி எஸ்.ஏ. பாப்டே தலைமையிலான அமர்வில் இன்றும், இரண்டாம் நாளாக இன்றும் நடைபெற்றது. அப்போது போது, தாங்கள் எந்தக்‍குழு முன்பும் பேச்சுவார்த்தைக்‍கு செல்லப்போவதில்லை என்றும், 3 சட்டங்களையும் திரும்பப்பெற வேண்டும் என்பதே தங்களின் கோரிக்‍கை எனவும், விவசாயிகள் தரப்பில் வழக்‍கறிஞர் தெரிவித்தார். 

அத்துடன், இது குறித்து கருத்து தெரிவித்த தலைமை நீதிபதி, 3 சட்டங்களையும் தற்காலிகமாக நிறுத்தி வைக்‍க உத்தரவிட்டனர். மேலும், விவசாயிகளுடன் சுமூக உடன்பாடு காண 4 பேர் கொண்ட குழு அமைக்‍கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை புதிய வேளாண் சட்டங்களை நடைமுறைப்படுத்தக்கூடாது என உத்தரவிட்டுள்ளது.

English Summary

Farmers vs new agricultural law ..! The Supreme Court set up a panel to negotiate

Latest Articles

KOLNews