KOLNews

76 குழந்தைகளை மீட்ட பெண் காவலருக்கு பதவி உயர்வு..! - தீரரை போற்றும் தில்லி போலீஸ்..!

தில்லியில்,  காணாமல் போன 76 குழந்தைகளை துணிவுடன் மீட்டதற்காக  தில்லி காவல் அதிகாரி சீமா டாக்காவிற்கு உதவி துணை ஆய்வாளராக பதவி உயர்வு வழங்கி கௌரவித்துள்ளது தில்லி காவல் துறை.

 சீமா டாக்கா, ஜூலை 6 2006 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த இவர், கடந்த மூன்று மாதங்களில் காணாமல் போன 76 குழந்தைகளை கண்டுபிடித்துள்ளார்.  இதில் 56 குழந்தைகள் 14 வயதிற்கும் குறைவானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.  பெரும்பான்மையான குழந்தைகள் கடந்த 12 மாதங்களில் காணாமல் போனவர்கள். இதற்காக சீமா டாக்காவிற்கு காவல் துறை ஆய்வாளராகப் பணி உயர்வு அளித்து தில்லி காவல்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து சீமா டாக்கா தெரிவித்ததாவது..

'நான் தடைகளின்றி தொடர்ந்து பணியாற்று வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இந்த குழந்தைகளை தில்லியிலிருந்து மட்டுமல்லாமல்,  மேற்கு வங்கம் பஞ்சாப் பீகார் போன்ற மாநிலங்களில் இருந்தும் மீட்டுள் ளோம்.  மேற்குவங்கத்தில் 2018ஆம் ஆண்டு காணாமல் போன ஒரு சிறுவன் தற்போது கிடைத்துள்ளான்.  இது போன்ற பல கடினமான தருணங்களை  எதிர் கொண்டு  இந்த குழந்தைகளை கண்டுபிடித்து உள்ளோம்' என கூறினார்.

English Summary

Female police officer promoted to rescue 76 children ..! - Delhi Police admires hero ..!

Latest Articles

KOLNews