KOLNews

இதற்காகவாவது.. கடவுளுக்கு நன்றி சொல்லுங்கள் ..!

ஏமாற்றங்கள் நிறைந்த வாழ்க்கையில், சில சமயங்களில் கடவுளை நம்பவேண்டுமா ? என்கிற விரக்தி ஏற்படும். ஆனால் கொஞ்சம் மாற்றி யோசித்து பார்த்தால், ஆஹா..இதற்காகவாவது கடவுளுக்கு நன்றி சொல்லலாமே என தோன்றும்.

சுய முன்னேற்ற நூல்கள் எழுதிப் புகழ் பெற்ற நார்மன் வின்சென்ட் பியல் ( Norman Vincent Peale ) என்பவர் ஒரு நண்பருடன் பேசிக் கொண்டிருக்கும்போது , " நாம் ஒவ்வொருவரும் கடவுள் நமக்குத் தந்த வாழ்க்கைக்காக , கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும் " என்று சொன்னார்.

 உடனே , “ ப்ச் ! நானே ஏகப்பட்ட கடன் வாங்கிவிட்டு , திண்டாடிக் கொண்டிருக்கிறேன் . தினமும் 50 பேராவது என்னைப் பணத்தைத் திருப்பித் தரச் சொல்லித் துளைத்து எடுக்கிறார்கள் . இந்த நிலையில் நான் கடவுளுக்கு எங்கே நன்றி சொல்வது ? என்று எரிச்சலுடன் கூறியுள்ளார் நண்பர்.

அதற்கு நார்மன் வின்சென்ட் , " அந்த 50 பேரில் நீங்கள் ஒருவராக இல்லாமல் போனதற்காகக் கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும் . ஏனெனில் யாருக்கும் நீங்கள் பணத்தைத் திருப்பித் தரப் போவதில்லை " என்றார் சிரித்தபடி 

English Summary

For this .. Thank God ..!

Latest Articles

KOLNews