KOLNews

கோர விபத்து..! - காரில் சென்ற தேசிய ஹாக்கி வீரர்களில் நால்வர் பலி

மத்திய பிரதேச மாநிலத்தில் தேசிய ஹாக்கி வீரர்கள் சென்ற கார், நேற்று அதிகாலையில் விபத்துக்குள்ளானதில், 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

முன்னதாக, மத்தியபிரதேச மாநிலம் இட்ரசி நகரிலிருந்து ஹோஷங்காபாத் நகரத்துக்கு, தியான் சந்திர டிராபி ஹாக்கி போட்டியில் விளையாடுவதற்காக 7 ஹாக்கி விளையாட்டு வீரர்கள், ஒரு காரில் சென்று கொண்டிருந்தனர்.

இந்நிலையில், நேற்று அதிகாலையில்,  ரைசல்பூர் கிராமத்தின் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரம் இருந்த மரத்தின் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்னானது.

அதையடுத்து அந்த காரில் இருந்த 4 ஹாக்கி வீரர்கள், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 3 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் ஒருவர் கலலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.

தற்போது அனைவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த கோர சம்பவம் இந்திய விளையாட்டு துறைக்கு பேர் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

English Summary

Four of the national hockey players who went in the car killed

Latest Articles

KOLNews