'ஆயுஷ்மான் பாரத் ஜெய் செஹத்' என்கிற ஜம்மு காஷ்மீரின் அனைத்து மக்களுக்கும் சுகாதார பாதுகாப்பை வழங்க வகை செய்யும், திட்டத்தை காணொளி மூலம் பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மத்திய உள்துறை மந்திரி மற்றும் ஜம்மு-காஷ்மீரின் துணைநிலை ஆளுநர் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியின் போது\இந்த மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் இணைந்துள்ள புற்றுநோயாளி ரமேஷ் லால் என்பவருடன் பேசிய பிரதமர், ‘ஆயுஷ்மான் பாரத் உங்கள் வாழ்க்கையை நீண்ட ஆயுள் கொண்டதாக ஆக்கியுள்ளது. இந்தத் திட்டம் மற்றும் அதன் நன்மைகள் குறித்து நீங்கள் சந்திக்கும் அனைவருக்கும் சொல்லுங்கள்’ என கேட்டுக்கொண்டார்.
இத திட்டமானது ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த ஒவ்வொரு குடும்பத்திற்கு ரூபாய் 5 லட்சம் வரையில் காப்பீட்டை அளிப்பதுடன், அவர்கள் 229 அரசு மருத்துவமனைகள், 35 தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வழிவகை செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Free health insurance scheme for the people of Jammu and Kashmir ..! - Prime Minister is proud ..!