KOLNews

இன்று முதல் வரும் 24 ஆம் தேதி வரை தாஜ்மகாலை இரவு நேரத்திலும் பார்வையிடலாம்..!

உலக அதிசயங்களில் ஒன்றாகவும், ஏராளமான வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் ஒரு வரலாற்று சின்னமாக விளங்கும் தாஜ் மகாலை இன்று முதல் இரவிலும் பார்வையிடலாம்.

அதாவது, இன்று முதல் வரும் 24 - ம் தேதி வரை இரவு நேரத்தில் பொதுமக்கள் சென்று பார்வையிடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது  கடந்த 2020 - ம் ஆண்டு மார்ச் 17 - ம் தேதி கொரோனா ஊரடங்கை முன்னிட்டு  தாஜ்மகால் மூடப்பட்டது . 

பார்வையாளர்கள் இல்லாத தாஜ்மகாலை குறித்து வருத்தி, கருத்து தெரிவித்து வந்த  நிலையில் , தாஜ்மகால் இன்று முதல் இரவு நேர பார்வைக்காக திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது . அதாவது,24 - ம் தேதி வரை பாரவையாளர்கருக்கு அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது . இரவு 8:30 மணி முதல் 10 00 மணி வரை பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள் இதற்காக ஆக்ராவில் உள்ள இந்திய தொல்பொருள் ஆய்வு மைய அலுவலகத்தில் சுற்றுலாவாசிகள் முன்பதிவு செய்து கொள்ளலாம் என இந்திய தொல்பொருள் ஆய்வு மையத்தின் ஆய்வாளர் வசந்த குமார் ஸ்வரணாகர் தெரிவித்துள்ளார் . 

இருப்பினும், உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி ஒரு நேரத்தில் 50 பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

English Summary

From today till the 24th you can visit the Taj Mahal at night ..!

Latest Articles

KOLNews