KOLNews

கொரோனாவுக்கான நிதியை சென்ட்ரல் விஸ்டா கட்டிட பணிக்கு செலவிடபடவில்லை..! - மத்திய அரசு திட்டவட்டம்..!

கடந்த 2019 அக்டோபரில்,  புதிய பாராளுமன்ற கட்டடம் கட்டுவதற்கான தீர்மானத்தை, மத்திய அரசு முன்மொழிந்த பொது, பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஏக மனதாக ஏற்கப்பட்டது. அதிருப்தியாளர்களாக எந்த உறுப்பினர் பெயரும் பதிவிடப்படவில்லை. ஆனால், கொரோனா கால கட்டத்தில் புதிய பாராளமன்றம் கட்டுவது குறித்து எதிர்க்கட்சிகள் விமர்சனத்தை முன்வைத்து வருகின்றன. அதாவது நிதி சூழல் மோசமாக உள்ள நிலையில், இந்த செலவு இப்பொது தேவையா ?என்றும், பிரதமர் மோதியின் அரசு பொறுப்பற்ற முறையில் செலவழிப்பதாகவும் குற்றம் சாட்டின. 

இந்நிலையில், புதிய நாடாளுமன்றம் உள்ளிட்ட சென்ட்ரல் விஸ்டா கட்டிட பணிகளுக்காக , சுகாதாரத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதி எதுவும் செலவிடப்படவில்லை என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது .

முன்னதாக,  கொரோனா காரணமாக இந்த கட்டுமான பணிகளை நிறுத்த வேண்டும் என தாக்கலான மனுக்களை டெல்லி உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ள நிலையில் , மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற அமைச்சகம் இந்த விளக்கத்தை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், இதில், கொரோனா கட்டுப்பாடுகளுக்கான நிதியில் இருந்து சென்ட்ரல் விஸ்டா திட்டத்திற்கு எதுவும் எடுக்கப்படவில்லை என்றும்,  இந்த திட்டத்திற்கு இந்த ஆண்டு மார்ச் வரை 195 கோடி ரூபாய் மட்டுமே செலவிடப்பட்டுள்ளதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது . 

அத்துடன், இந்த தருணத்தில் கட்டுமானப்பணிகளை நிறுத்தினால் , அதை நம்பி உள்ள தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என சுட்டிக்காட்டியதுடன்,  திட்டத்தை தள்ளிவைத்தால் செலவினம் அதிகரிக்கும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது . 

English Summary

Funds for Corona have not been spent on building Central Vista ..! - Central Government ..!

Latest Articles

KOLNews