KOLNews

கும்பல் வல்லுறவு..! - 45 வயது பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை..!

சில வருடங்களுக்கு முன் தலைநகர் டெல்லியில் நடைபெற்ற நிர்பயா பாலியல் கொலை சம்பவத்தை ஞாபகப்படுத்தும் வகையில், மத்தியப்பிரதேச மாநிலம், சிதி மாவட்டத்தின் ஹார்டி கிராம மலைப்பகுதியில் கணவனை இழந்த  45 வயது பெண் ஒருவர் கும்பல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டுள்ள மற்றொரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

இவருக்கு, 16 மற்றும் 18 வயதாகும்  இரண்டு மகன்கள் உள்ளனர். குடிசை ஒன்றில் வசித்து வந்த அவர் தனது சிறிய குடிசையின் ஒரு பகுதியிலேயே ஒரு சிறிய கடையையும் நடத்திவருகிறார்.அவருக்கு சகோதரி ஒருவர் உதவியாக இருந்துள்ளார்.

போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது - , கடந்த சனிக்கிழமை இரவு, பெண்மணியின் கடைக்குவந்த 4 பேர், அவரிடம் குடிக்க தண்ணீர் கேட்பதுபோல குடிசைக்குள் புகுந்து, அப்பெண்ணை மிகக் கொடூரமான முறையில் கும்பலாக  வல்லுறவுக்கு உள்ளாக்கியுள்ளனர்.  அத்துடன், அந்தப் பெண்ணின் பிறப்புறுப்பில் இரும்புக் கம்பியையும் செருகி, மனிதத்தன்மையற்ற வகையில் சித்ரவதை செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். 

துரதிர்ஷ்டவசமாக இந்த கொடுமையில் இருந்து அவரை காப்பாற்ற அந்த பெண்ணின் இரு மகன்களும் அங்கில்லை, அத்துடன்,உடனிருந்த சகோதரியாலும் அந்த 4 பேரைத் தடுக்கமுடியவில்லை. பாதிக்கப்பட்ட பெண் தற்போது ரேவா மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சமீபத்தில், பாஜக ஆளும் உ.பி. மாநிலம் பதான்மாவட்டத்திற்கு உட்பட்ட மேவ்லி கிராமத்தில், 42 வயதுப் பெண் கோயிலுக்கு உள் ளேயே அர்ச்சகர் உள்ளிட்ட 3 பேரால் கொடூரமாக பாலியல் வன்கொலை செய்யப்பட் ட நிலையில், பாஜக ஆளும் மற்றொரு மாநிலமான மத்தியப் பிரதேசத்திலும் இந்த கொடுமையான நிகழ்வு நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

English Summary

Gang rape ..! - Cruelty to a 45 year old woman ..!

Latest Articles

KOLNews