KOLNews

ஒண்ணு கூடிட்டாங்கய்யா..! - இந்தியாவிற்கு தலைவலி தர தயாராகிறதா தலிபான்..?

இந்திய துணைக்கண்டத்தை சுற்றி உள்ள நாடுகள் பலவும் எதோ ஒரு வகையில் இந்தியாவிற்கு பாதகமாகவே நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நாடுகளாக மாறிவருகின்றன. 

பாகிஸ்தான் பற்றி சொல்லவே வேண்டாம். சீனாவும் எல்லையில் அவ்வப்போது தொல்லைகள் கொடுத்து வருகிறது. இலங்கையும் , இந்தியாவின் அருகில் உள்ள தன் நீர் மற்றும் நில பரப்பில் சீனாவுடன் இணைத்து தன் உட்கட்டமைப்பு வசதிகளை பெருக்குவதாக கூறி, சீனாவிற்கு நம்மை எட்டிப்பார்க்கும் வசதிகளை செய்து தருகிறது.

Does India share its land boundary with Afghanistan? - Quora

இந்நிலையில் இந்தியாவுடன் ( பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீர் பகுதி வாயிலாக )  கிட்டத்தட்ட 106 கிலோமீட்டர் எல்லை பகுதியை பகிர்ந்து கொள்ளும் ஆப்கானிஸ்தானை, தற்போது தன் கட்டுக்குள் கொண்டுவந்திருக்கும் தலிபான்கள்,  சீனாவை மிக முக்கிய கூட்டு நாடாக பாவிப்பதாக விவரித்துள்ளது இந்தியாவுக்கு ஒரு புதிய பிரச்னை.

தலிபான் செய்தி தொடர்பாளர், கடந்த 20 ஆண்டு காலப் போரின் விளைவாக ஆப்கானிஸ்தானில் பொருளாதாரம் அகலபாதாளத்திற்கு சென்றுள்ளதாக தெரிவித்து, ஆப்கானிஸ்தானை மீண்டும் கட்டமைப்பதில் சீனாவின் உதவியை எதிர்நோக்கி  காத்திருக்கிறோம் என தெரிவித்துள்ளார் .  . 

முன்னதாக, இதுகுறித்து தலிபான் செய்தித்தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் இத்தாலி நாளிதழுக்கு ஒன்றிற்கு அளித்த பேட்டியில் , " சீனா எங்களது மிக முக்கிய கூட்டு நாடாக உள்ளது . ஆப்கானிஸ்தானில் முதலீடு செய்யவும் நாட்டை மீண்டும் கட்டியெழுப்பவும் அவர்கள் சாதனை தயாராக உள்ளனர் . எங்களுக்கு சிறப்பான வாய்ப்புகளை அளித்துவருகின்றனர் . எங்கள் நாட்டில் செழிப்பு மிக்க செப்பு சுரங்கங்கள் உள்ளன . சீனாவின் உதவியோடு இதளை நவீனப்படுத்தி இயக்கவுள்ளோம் . உலகம் முழுவதும் உள்ள சந்தைகளுக்கு சீனாதான் எங்களுக்கு வாயிலாக உள்ளது " என தெரிவித்துள்ளார்.

India's top 10 foreign policy challenges in 2014 | South Asia@LSE

ஆக, இந்தியாவுக்கு எதிரான சக்திகள் எதோ ஒரு காரணத்தை கூறி கொண்டு கைகோர்கும் பின்னணியில் எந்த நோக்கம் இருக்கும் என்பது ஒரு புறம் இருக்க. இதனை இந்தியா எந்த வகையில் எதிர்கொள்ளும் என்பதில் புவிசார் அரசியல் நோக்கர்கள் தங்கள் பார்வையை செலுத்த ஆரம்பித்துள்ளனர்.

English Summary

Get together..! - Is the Taliban preparing to give India a headache?

Latest Articles

KOLNews