KOLNews

மகிழ்ச்சி அளிக்கிறது ..! - நடிகர் சித்தார்த்தின் மன்னிப்பை ஏற்றார் சாய்னா நேவால்..!

பிரபல பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால், தன்னை பற்றி ட்விட்டரில் விமர்சித்த நடிகர் சித்தார்த், மன்னிப்புக்‍ கேட்டுள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

அண்மையில், பஞ்சாபில் பிரதமர் மோடி, தனது பயணத்தை முன்னெடுத்த போது, வழியில் அவருக்கு ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடு குறித்து பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவாலின் கருத்து தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், அவ்வப்போது பாஜக மற்றும் பிரதமர் மோடியை விமர்சித்து வரும் , நடிகர் சித்தார்த்,  சாய்னா நேவாலின் கருத்துக்கு சர்ச்சைக்கு உரிய வகையில் பதில் ட்விட் செய்தார். இதற்கு பல தரப்பினரிடமிருந்தும் கண்டங்கள் எழவே, நடிகர் சித்தார்த் வேறுவழியின்றி சாய்னா நேவாலிடம் மனம் திறந்து மன்னிப்பு கோரினார். 

இது குறித்து, அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், சில நாட்களுக்கு முன்பு தங்கள் ட்வீட் ஒன்றிற்கு தான் அளித்த rude joke-க்குக்‍காக மன்னிப்பு கேட்பதாக தெரிவித்தார். தனது ட்வீட் நகைச்சுவைக்காக மட்டுமே என்றும், உள்நோக்கம் கொண்டது அல்ல என்றும் கூறினார். தான் எப்போதும் பெண்களை மதிப்பவன் எனக்‍ குறிப்பிட்ட சித்தார்த், ஒரு பெண்ணான தங்களைத் தாக்கும் நோக்கம் தனக்கு சிறிதும் இல்லை எனத் தெரிவித்தார். சாய்னா நேவால் எப்போதும் தனது சாம்பியனாக இருப்பார் என்றும் சித்தார்த் கூறினார். 

இதற்கு பதிலாக , நடிகர் சித்தார்த் மன்னிப்பு கேட்டது மகிழ்ச்சியளிப்பதாக சாய்னா தெரிவித்துள்ளார். அதாவது, பெண்களை இதுபோன்று வசைபாடக் கூடாது எனக்‍ கூறியுள்ள சாய்னா, சித்தார்த் கூறியது ஏன் வைரலானது என தெரியவில்லை என்றும், அதை கண்டு ஆச்சர்யமடைந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

English Summary

Gives pleasure ..! - Saina Nehwal accepts actor Siddharth's apology ..!

Latest Articles

KOLNews