KOLNews

குறைபாடுகள் சரிசெய்யப்படும்..! - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு இன்போசிஸ் பதில்.

பிரபல ஐடி நிறுவனமான இன்போசிஸ்சின் இயக்குனர் நந்தன் நிலேகனி, தாங்கள் செயல்படுத்த ஆரம்பித்துள்ள, வருமான வரி துறைக்கான  இ - பதிவு வலைப்பக்கத்தில் உள்ள குறைபாடுகளை விரைந்து களைவோம் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு தனது ட்விட்டர் பதிவின் மூலமாக பதில் அளித்துள்ளார்.

முன்னதாக கடந்த ஜூன் 7ஆம் தேதி, வருமானவரி துறைக்கான புதிய இ - பதிவு வலைப்பக்கம் துவக்கப்பட்டது. அதன் சேவைகளை இன்போசிஸ் நிறுவனம் பராமரித்து வரும் நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அந்த புதிய வலைப்பக்கத்தில் உள்ள குறைபாடுகளை களைவதுடன், , வருமான வரி செலுத்துவோரை, தனது தரமான சேவையின் மூலம் எவ்வித ஏமாற்றத்திற்கும் உள்ளாகாமல் இன்போசிஸ் பார்த்துக்கொள்ளவேண்டும் என்றும், வரி செலுத்துவோரின் முறையீடுகளுக்கு முன்னுரிமை காட்ட வேண்டும் என்றும் தனது கருத்தை ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் அதற்கு தன் ட்விட்டர் பக்கத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு பதிலளித்துள்ள இன்போசிஸ்சின் இயக்குனர் நந்தன் நிலேகனி,, வருமான வரித்துறைக்காக ஜுன்  7இல் துவங்கப்பட்ட புதிய வலைதள பக்கத்தில் உள்ள ஆரம்ப நிலை குறைபாடுகளை களைவதில் தீவிரம் காட்டிவருவதாகவும், ஒரு வார காலத்தில் குறைபாடுகள் சீர்செய்யப்படும் என்றும், தெரிவித்துள்ளார்.

English Summary

Glitches will be resolved.! - Infosys responds to Finance Minister Nirmala Sitharaman.

Latest Articles

KOLNews