KOLNews

மன்னிப்பு கேட்டார் ஹர்பஜன் சிங் ..! - சர்ச்சையான பதிவு

அண்மையில் பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், தனது ட்விட்டர் பதிவில் இட்ட பதிவு ஒன்று சர்ச்சையானது. இந்நிலையில் அது பார்வேர்ட் செய்யப்பட்ட வாட்ஸப் பதிவு, அதன் உள்ளக்கடகம் குறித்து சரியாக அறிந்துகொள்ளாமல் பதிவிட்டுவிட்டேன் என்றும், அதற்கும் மன்னிப்பும் கோரியுள்ளார். 

பஞ்சாபில் உள்ள சீக்கியர்களின் புனித ஸ்தலமான தங்க கோவிலில், உள்ளெ பதுங்கியிருந்த தீவீரவாதிகளை  அழிக்கும் வண்ணம் அப்போதைய பிரதமர் இந்திராகாந்தியின் உத்தரவால் எடுக்கப்பட்டது  'ப்ளூ ஸ்டார்' ஆபரேஷன்,  இதில் காலிஸ்தான் தீவீரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்நிலையில் அந்த சம்பவத்தின் 37வது ஆண்டு நினைவை குறிக்கும் வகையில், அப்போதைய காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தலைவராக இருந்த பிந்தரன் வாலே குறித்து புகழப்பட்ட பதிவை  ஹர்பஜன் சிங் பகிர்ந்துள்ளார். இது பெரும் சர்ச்சையானது.

இந்நிலையில், இது குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள ஹர்பஜன் சிங், பார்வேர்ட் செய்யப்பட்ட வாட்ஸப் பதிவின் உள்ளடக்கம் குறித்து உணராமல் போட்ட பதிவு இது. நான் தேசத்திற்கு எதிரான எந்த விஷயத்திற்கும் ஆதர்வானவன் அல்ல. நான் இந்தியாவிற்காக போராடும் சீக்கியன்.என் வேர்வையையும் ரத்தத்தையும்  இந்தியாவிற்காக பலகாலம் தொட்டே சிந்தி வருகிறேன்.நான் எந்த சூழலிலும் நாட்டின் எதிரிகளுக்கு  ஆதரவாக இருக்கமாட்டேன்' என தெரிவித்துள்ளார்.

முன்னதாக அவர் வெளிட்ட அந்த சர்ச்சைக்குரிய பதிவில், பெருமையோடு வாழு..மதத்திற்காக மடி, என்ற வாசகங்களுடன் பிந்தரன் வாலேவை புகழப்பட்ட போஸ்டர் பதியப்பட்டிருந்தது. 

ஜூனி 1 1984இல் ப்ளூ ஸ்டார் சம்பவம் நடந்தது என்பது 50 வயதை கடந்தவர்களுக்கு ஞாபகம் இருக்கலாம்.

English Summary

Harbhajan Singh apologizes - Controversial post

Latest Articles

KOLNews