KOLNews

180 மாணவிகளின் தலை முடியை வெட்டிய தலைமை ஆசிரியர்..! - கோபத்தில் கொந்தளிக்கும் பெற்றோர்கள்..!

தெலுங்கானா .மெதக் நகரில் உள்ள அரசு பள்ளி ஒன்றில்  தங்கும் இடம், உணவு அனைத்தும் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.

இங்கு 6ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகள், தங்கி படித்து வரும் சூழலில் , 

கடந்த ஏப்ரல் மாதம் முதல் கடுமையான தண்ணீர் தட்டுப்பாட்டுக்கு இந்த பள்ளி உள்ளானது.

அதை சமாளிக்க செய்வதறியாது தவித்துள்ளது பள்ளி நிர்வாகம். 

இருப்பினும், 3 நாட்களுக்கு ஒருமுறை டேங்கர் லாரி மூலம் தண்ணீர் பெற்று உபயோகிக்கப்பட்டது . இதனால் செலவு ஏற்பட்டது.

ஆகவே இதற்கான செலவை எப்படி குறைப்பது என சிந்திக்க ஆரம்பித்துவிட்டது நிர்வாகம்.

இந்நிலையில்,தலைமை ஆசிரியர் அருணா ரெட்டி பள்ளி மாணவிகள் குளிப்பதற்கு அதிக அளவில் தண்ணீர் செலவழிப்பதும் குறிப்பாக மாணவிகளுக்கு தலைமுடி நீளமாக இருப்பதால் தான் குளிப்பதற்கு அதிக தண்ணீர் செலவு ஆவதாகவும்  கருதி, அங்கு தங்கி பயின்ற 180 மாணவிகளின் தலை முடியையும் வெட்ட உத்தரவிட்டார்.

இதையடுத்து அந்த மாணவிகள் அனைவருக்கும் ‘கிராப்பு’ கட்டிங் செய்யப்பட்டது.

இதற்கிடையே நேற்று மாணவிகளை சந்திப்பதற்காக வந்த பெற்றோர்கள் தங்கள் பெண் குழந்தைகள் முடிவெட்டப்பட்டு இருப்பதை கண்டு பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர்.

மேலும், ஆத்திரம் அடைந்த அவர்கள் தலைமை ஆசிரியருக்கு எதிராக பள்ளி முன்பு போராட்டத்தில் குதித்தனர். 

அதையடுத்து பள்ளி வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் தற்போது,  இது குறித்து முறையான விசாரணை வேண்டும் என பெற்றோர்கள் கோரி வருகின்றனர்.

English Summary

Headmaster cuts hair of 180 Girl students - Parents in anger ..!

Latest Articles

KOLNews