பிசிசிஐயின் தலைவர் சவுரவ் கங்குலிக்கு மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், தற்போதைய பிசிசிஐயின் தலைவருமான சவுரவ் கங்குலி இன்று ஏற்பட்ட மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு இன்று மாலை ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை நடைபெறும் என தெரிகிறது. முன்னதாக கொல்கட்டாவில் இருந்த அவர், தனது வீட்டில் உள்ள உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சி எடுக்கையில் சிரமமாக உணர்ந்ததாக தெரிகிறது. அதனையடுத்து அவர் அங்குள்ள வுட்லாண்ட்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மருத்துவர்கள் தரப்பில் இருந்து இன்னும் முறையான தகவல் வராத நிலையில், கங்குலியின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகவும் அவர் இன்று இரவு அதற்கான சிகிச்சைக்கு உள்ளாக்கபடுவார் என்றும் தெரிகிறது. அவருக்கு நெஞ்சுவலி இருப்பதால் ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுவதாக சொல்லப்படுகிறது.
ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற உள்ள 'சையது முஷ்டாக் அலி டிராபி; t20 போட்டிக்கான முன்னேற்பாடுகளை கடந்த வாரம் ரங்கோலி மேற்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Heart attack ..! - Saurav Ganguly admitted to hospital ..!