KOLNews

எத்தனை மாதம் சம்பளம் இல்லாமல் வாழமுடியும்..? -அலுவலகத்திலேயே தற்கொலை செய்து கொண்ட பிஎஸ்என்எல் ஊழியர்

பொருளாதார வளர்ச்சியின் மந்த நிலையா, அல்லது நிர்வாக கோளாறா, அல்லது தவறான கொள்கை முடிவா?  என விவாதத்திற்கு உரிய விஷயமாக பிஎஸ்என்எல் நிறுவனத்தின் வீழ்ச்சி அமைந்துவிட்டது.

இந்நிலையில், கேரளாவின் நிலாம்பூர் பகுதியில் 11 மாதங்களாக ஊதியம் வழங்கப்படாததால், ஒப்பந்த ஊழியர் ஒருவர், அலுவலகத்திலேயே தற்கொலை செய்து கொண்டிருக்கும் பரிதாப நிகழ்வு நாட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ராமகிருஷ்ணன் (52).  இவர் கடந்த 30 ஆண்டு காலமாக பிஎஸ்என்எல் ஒப்பந்த ஊழியராக இருந்தவர்.தற்போது இவருக்கு 2019 ஜனவரி மாதம் முதல் ஊதியம் வழங்கப்படவில்லை என்று சொல்லப்படுகிறது.

மேலும், நிதி பற்றாக்குறை  காரணமாக இவர்களது பணி நேரம் மற்றும் பணி நாட்களும் குறைக்கப்பட்டதால், கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்த அவர் அலுவலகத்திலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதையடுத்து  பிஎஸ்என்எல் நிறுவனத்தின் வீழ்ச்சி அதிகம் பேசப்படும் பொருளாக மாறக்கூடிய நிலை உருவாகியுள்ளது.

 

English Summary

How many months can you live without pay? - BSNL employee who committed suicide in office

Latest Articles

KOLNews