KOLNews

இன்னும் எத்தனை வேண்டும்..? - 100 ஆக்சிஜன் சிலிண்டர்களை கொடுத்து உதவிய ரவீனா டாண்டன்..!

கொரோனா உயிர்பலிகளை வாங்கிக்கொண்டிருக்கும் இந்த சிக்கலான நேரத்தில், சில திரை பிரபலங்கள் கொரோனாவால்  பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ முன்வந்துள்ளனர்.  தங்களது செல்வாக்கை பயன்படுத்தி தங்களால் முடிந்த மட்டும் உதவ முன்வந்திருக்கிறார்கள். 

அரிதாரம் பூசிய அவர்களின் அழகிய முகங்களை விட அரிதாரம் பூசாத அவர்களின் இதயம் மிக அழகாக உள்ளது, தற்போது தெரியவந்துள்ளது. இதற்கு உதாரணமாக இருக்கிறார் நடிகை ரவீனா டாண்டன்.

உங்களுக்கு எளிதாக ஞாபகம் வரவேண்டுமென்றால், கமல் ஹாசனுக்கு ஆளவந்தான் திரைப்படத்தில் ஜோடியாக நடித்தவர்.

COVID19: Raveena Tandon arranges oxygen cylinders, says 'Making a change  for betterment of humanity' | Celebrities News – India TV

முன்னதாக அவர், தனது சில நண்பர்களுடன்டெல்லியில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு 300 ஆக்ஸிஜன் சிலிண்டர்களை அனுப்பியிருந்தார், இருப்பினும் அங்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறை தொடர்ந்து வருதையுணர்ந்து  இப்போது மீண்டும் 100 சிலிண்டர்களை அனுப்பியுள்ளார், அத்துடன் தேவைப்படும் நோயாளிகளுக்கு உதவ கூடுதலாக உதவ முன்வரும் 400 பேரை உடன் சேர்க்க முயல்கிறார். சமூக ஊடகங்கள் மூலம் இந்த அழைப்பை விடுத்தது பதிவிட்டுள்ளார்.

அத்துடன்,  மீதமுள்ள எண்ணிக்கையை அடைவதற்கு  எவ்வாறு மற்றவர் பங்களிக்க முடியும் என்ற விவரங்களையும் தெரிவிக்கிறார். 

ரவீனாவின் இந்த மனிதாபிமான முயற்சி பலரை அண்ணாந்து பார்க்க வைத்துள்ளது.

English Summary

How many more do you want ..? - Raveena Tandon who helped by giving 100 oxygen cylinders ..!

Latest Articles

KOLNews