புதுடெல்லி, பாஜகவை சேர்ந்த, மறைந்த முன்னாள் மத்திய நிதி மந்திரி அருண்ஜெட்லி, டெல்லி கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக 14 ஆண்டுகள் பதவி வகித்தார். அவர் மறைவுக்கு பின், அவர் நினைவாக டெல்லியில் உள்ள பெரோஸ் ஷா கோட்லா கிரிக்கெட் ஸ்டேடியத்துக்கு அருண் ஜெட்லியின் பெயர் சூட்டப்பட்டது.
இந்நிலையே;, தற்போது டெல்லி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் அருண் ஜெட்லிக்கு முழு உருவச்சிலை வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால்,இந்த முடிவுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் பிஷன் சிங் பேடி தனது கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தி உள்ளார்.

முன்னதாக இது தொடர்பாக அருண் ஜெட்லியின் மகனும், டெல்லி கிரிக்கெட் சங்கத்தின் தலைவருமான ரோஹன் ஜெட்லிக்கு பிஷன் சிங் பெடி எழுதியிருக்கும் கடிதத்தில், டெல்லி கிரிக்கெட் சங்கம் தனது பொறுமையை சோதிப்பதுடன், கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும் நிலைக்கு தன்னை தள்ளுகிறது என்றும், தன்னை பொறுத்தமட்டில் டெல்லி கிரிக்கெட் சங்க நிர்வாகத்தில் அருண் ஜெட்லி சிறப்பாக செயல்படவில்லை என்றும், அருண் ஜெட்லி ஒரு அரசியல் தலைவர். அவரை பாராளுமன்றத்தில் நினைவு கூறலாம். அவருக்கு கிரிக்கெட் ஸ்டேடியத்தில் சிலை வைப்பது என்பது தவறானதாகும் என்றும் தெரிவித்துள்ளார்.
அத்துடன், .டெல்லி ஸ்டேடியத்தில் உள்ள கேலரிக்கு வைக்கப்பட்டு இருக்கும் தனது பெயரை உடனடியாக நீக்கி விட கோரியுள்ள பேடி, டெல்லி கிரிக்கெட் சங்கத்தின் உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் தான் விலகி விடுவதாகவும், . தீவிர ஆலோசனைக்கு பிறகு தான் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் பிஷன் சிங் பேடி.
English Summary
Idol for political leader at cricket stadium ..! - Former Indian cricketer Bishan Singh Bedi protests ..!