KOLNews

உஷார் நிலையில் இந்தியா .! - சீன எல்லையில் பீரங்கிகளை நிறுத்த திட்டம்

நாட்டின் பாதுகாப்பு கருதி வடகிழக்கு மாநிலமான அருணாச்சலப் பிரதேசத்தில், அதிநவீன, எம் - 777 பீரங்களை நிறுத்தி வைக்க, ராணுவம் திட்டமிட்டுள்ளது.

சீன எல்லை பகுதியை ஒட்டிய இந்த இடத்தில் வரும்  டிசம்பருக்குள் இந்தப் பணியை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

நம் பக்கத்து நாடான சீனா வடகிழக்கு மாநிலமான அருணாச்சலப் பிரதேசத்தின் ஒரு பகுதியின் மீது  உரிமை கோரி வருவதும் அதற்கு மத்திய அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருவதும் மறைந்த முன்னாள் பிரதமர் நேரு காலம் தொட்டே நடந்து வருவது தான்.

குறிப்பாக அருணாச்சலப் பிரதேசத்துக்கு பிரதமர் உள்பட முக்கிய தலைவர்கள் செல்லும்போதெல்லாம், அதற்கு, சீனா எதிர்ப்பு தெரிவிப்பதை வழக்கமாக கொண்டுள்ளது.

அருணாச்சலப் பிரதேசத்தில், ஹிம் விஜய் என்ற பெயரில் விரைவில் நடைபெற உள்ள மலைப் பகுதி போர் ஒத்திகைக்கு சீனா எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது.

தற்போது, சீன அதிபர், ஜி ஜின்பிங், இந்தியா வர உள்ள நிலையில், அருணாச்சலப் பிரதேசத்தில், சீன எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளில், அமெரிக்க தயாரிப்பான எம் - 777 பீரங்கிகளை நிறுத்தி வைக்க, ராணுவம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

முன்னதாக 145 பீரங்கிகள் வாங்க, அமெரிக்காவுடன், 2016ல் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. மொத்தம், 5,070 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த ஒப்பந்தத்தின்படி, 25 பீரங்கிகள் அமெரிக்காவில் தயாரிக்கப்படுகின்றன. மீதமுள்ள, 120 பீரங்கிகள், நமது நாட்டில் இணைக்கப்பட உள்ளன.

இவை வெகு விரைவில் நமது ராணுவத்துக்கு கிடைக்க உள்ளது. அவற்றில் 18 பீரங்கிகள் கொண்ட, ஏழு ரெஜிமென்ட் என, மொத்தம், 126 பீரங்கிகளை, சீன எல்லையில், அருணாச்சலப் பிரதேசத்தில் நிறுத்தி வைக்க ராணுவம் முடிவு செய்துள்ளது.

Image result for modi with chinese president

என்னதான் ஒரு பக்கம் சீன அதிபர் வருகையை திறந்த மனதுடன் வரவேற்றாலும், தேச பாதுகாப்பில் 'பேச்சு பேச்சாக இருக்கும்' என நம்பமுடியாது என்கிற யதார்த்தை புரிந்து கொண்ட அரசாக மோடி நிர்வாகம் இருப்பதையே இது காட்டுவதாக புவிசார் அரசியல் பேசும் வல்லுநர்கள் கருதுகிறார்கள்.

English Summary

India on the alert. - Plan to stop artillery on Chinese border

Latest Articles

KOLNews