KOLNews

அமெரிக்காவில் இந்திய மாணவர் சுட்டுக்கொலை..!

இந்திய மாணவர் அபிஷேக் சுதீஷ் பட் (வயது 25). இவர்  உயர்கல்விக்காக அமெரிக்காவுக்கு சென்றுள்ள நிலையில், அங்கு ஒரு ஓட்டலில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

எதற்காக இந்த கொலை நடத்தப்பட்டது என்பது குறித்து இன்னும் தகவல் தெரியவரவில்லை.

Image result for indian student shot dead in usa today

கர்நாடக மாநிலம் மைசூரு மாவட்டத்தை சேர்ந்தவர் அபிஷேக் சுதீஷ் பட். .கணினி அறிவியல் பிரிவில் இளநிலை பட்டப்படிப்பை முடித்த அவர், 2 ஆண்டுகளுக்கு முன்பாக உயர் கல்விக்காக அமெரிக்காவின் கலிபோர்னியா மகாணத்திற்கு சென்றார். 

ஆனால், அவரது படிப்பு முடிவதற்கு இன்னும் 4 மாதங்களே உள்ள நிலையில், நேற்று முன்தினம் இரவு 11.30-க்கு அபிஷேக்கின் பெற்றோருக்கு இந்த துயர செய்தி வந்துள்ளது.

அப்போது, பகுதிநேர வேலையாக அபிஷேக் வேலை செய்த ஓட்டலில் வைத்து, மர்ம நபர் ஒருவர் அவரை சுட்டுக் கொன்றதாக அவரது பெற்றோருக்கு தெரிவிக்கப்பட்டது. 

இதையடுத்து, இந்திய தூதுரகத்தை தொடர்பு கொண்டு உதவி கேட்டுள்ளனர். அபிஷேக் கொலைக்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை. 

இந்நிலையில், சம்பவம் நடந்த சான் பெர்னான்டினே பகுதியில் புயல் காற்று வீசி வருவதால் அபிஷேக்கின் உடலை மீட்பதில் சிக்கல் எழுந்துள்ளது. இதற்கிடையே,அபிஷேக்கின் உடலை மீட்டு வருவதற்காக அவரது சகோதரர் அமெரிக்கா விரைந்துள்ளார். 

English Summary

Indian student shot dead in US

Latest Articles

KOLNews