டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்திற்கு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆதரவு தெரிவித்ததற்கு, அந்நாட்டு தூதரை நேரில் வரவழைத்து, இந்தியா கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.
டெல்லியில், மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் மாபெரும் போராட்டத்தை முன்னெடுத்துள்ள நிலையில், கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி, டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் கவலை அளிப்பதாகவும், அவர்களது அமைதி வழி போராட்டத்திற்கு கனடா ஆதவளிப்பதாகவும் பேசியிருந்தார்.
அதையடுத்து, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் இந்த பேச்சிற்கு கடும் கண்டனம் தெரிவித்த மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம், இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட வேண்டாம் என கூறியது.
இந்நிலையில், டெல்லியில் உள்ள கனடா தூதரை அழைத்த மத்திய வெளியுறவு அமைச்சக அதிகாரிகள், இந்தியாவின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிட்டால் இருநாடுகளின் உறவு கடுமையாக பாதிக்கப்படும் என எச்சரித்தனர்.
English Summary
Interference in domestic affairs will affect relations ..! : India warns Canada