KOLNews

பாஸ்போர்ட் பெற ‘டிஜிலாக்கர்’ முறை அறிமுகம் .! - என்னென்ன சாதகமான விஷயங்கள் ?

வெளிநாடு செல்ல ஏதுவாக, பாஸ்போர்ட் பெற விண்ணப்பிப்பவர்கள் நேர்காணலின்போது, ‘டிஜிலாக்கர்’ செயலி மூலம் சான்றிதழ்களை சமர்ப்பிக்கும் வசதியை பாஸ்போர்ட் அலுவலகம் அறிமுகம் செய்துள்ளது. 

இது தொடர்பாக மண்டல பாஸ்போர்ட் அதிகாரி எஸ்.கோவேந்தன் தெரிவித்ததன் தொகுப்பு  - 

மத்திய அரசின் மின்னணு, தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், அறிமுகப்படுத்தி உள்ள ‘டிஜிலாக்கர்’ என்ற மின்னணு பாதுகாப்பு பெட்டகத்தில், பொதுமக்கள் தங்களது கல்வி, சாதி, இருப்பிட, வருமான சான்றிதழ்கள், ஓட்டுநர் உரிமம், வீட்டுப் பத்திரங்கள், காப்பீட்டு ஆவணங்கள் உள்ளிட்ட அனைத்து முக்கிய ஆவணங்களையும் மின்னணு முறையில் சேகரித்து வைக்க முடியும்.

Passport Apply - AKHTAR INFRATECHஇதன் முக்கிய நோக்கம்,  நாட்டு மக்கள் அனைவருக்கும் மின்னணு முறையில் சேவை மற்றும் அறிவுசார்ந்த பொருளாதாரத்தை உருவாக்குவது தான். 

பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு செல்லும்போது தங்களது அசல் சான்றிதழ்களை கொண்டு செல்ல வேண்டும் என்கிற அவசியமில்லை, அதற்கு பதிலாக அவர்கள், டிஜிலாக்கர் செயலியில் தங்கள் ஆவணங்களை சேமித்து வைத்திருந்தால், நேர்காணலின் போது டிஜிலாக்கரில் இருந்தே ஆவணங்கள் நேரடியாக சரிபார்க்கப்படும். அத்துடன், இதனால், ஆவணங்கள் தொலைந்து போகுமோ, சேதம் அடையுமோ என அச்சப்பட தேவையில்லை.

தவிர, இதனால் பேரம் மிச்சமாவதால், கூடுதல் பேரை நேர்காணலுக்கு அழைக்க முடியும். மேலும், டிஜிலாக்கரில் போலி ஆவணங்களை பதிவேற்றம் செய்ய முடியாது. இதனால், மோசடிகள் தடுக்கப்படும். அதையும் மீறி, போலி ஆவணங்களை பதிவேற்றம் செய்து அதன்மூலம் பாஸ்போர்ட் பெற்றது கண்டுபிடிக்கப்பட்டால் அவர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்படும்.

English Summary

Introducing 'Digilocker' method to get a passport! - What are the positive things?

Latest Articles

KOLNews