KOLNews

கொரோனாவால் ஆண்மைக்கு ஆபத்தா..?

கொரோனா  பொதுவாக உடல் நலத்தை பாதிப்பதுடன் மன அழுத்தத்தையும் பீதியையும் உண்டாக்குவதாக நினைத்திருந்த நிலையில், அது ஒருவரின் பாலியல் சக்தியையும் குறைப்பதாக ஒரு புது சிக்கல் எழுந்துள்ளது. 

கொரோனா பாதிப்புகள் குறித்த சமீபத்திய ஆய்வில்,  ஏற்கனவே கொரோனா காரணமாக ஏற்பட்ட மன அழுத்ததிற்கு உள்ளாகும் ஆணிற்கு, அவரின்  விறைப்புத்தன்மை குறையும் வாய்ப்பு ஆறு மடங்கு அதிகரிக்கிறது என்று தெரிய வந்துள்ளது.

மக்கள் பொதுவாக தங்கள் பாலியல் மற்றும் பாலியல் ஆரோக்கியம் பற்றி வெளிப்படையாக பேச விரும்புவதில்லை, இது குறித்து யாரும் பெரிதாக பேசவில்லை. பொதுவாக மன அழுத்தம் நம் ஹார்மோன்கள் மற்றும் மனநிலையை நேரடியாக பாதிப்பதன் மூலம் ஆண்மை குறைவு ஏற்பட வாய்ப்புள்ளது என்பது தெரிந்த விஷயம் தான். 

ஆனால், கொரோனா தொற்றுக்கும் , ஆணின்  விறைப்புத்தன்மைக்கும் இடையிலான தொடர்பு பற்றிய சில முன்னணி இந்திய ஆண்ட்ரோலாஜிஸ்டுகள் (ஆணினவியலாளர்கள்} கூறும் கருத்துக்கள் இங்கு கவனிக்கத்தக்க ஒன்றாக உள்ளது.

இது குறித்து பெங்களூரின் NU மருத்துவமனைகளின் ஆலோசகர் ஆண்ட்ரோலஜிஸ்ட் பிரமோத் கிருஷ்ணப்பா கூறுவது கவனிக்கத்தக்கது. அவர்,  "கோவிட் -19 தொற்று மனிதர்களுக்கு உடல் மற்றும் மன நோய்களை ஏற்படுத்தியுள்ளது. நுரையீரல் மிக முக்கியமான உறுப்பு என்றாலும், ஆண்குறி,யும் அதைப்போன்றே  மிக முக்கியமான உறுப்பு கோவிட் -19 வைரஸ் துகள்கள் ரத்த குழாய்களை செயலிழக்க  வைப்பதன் மூலம் விறைப்புத்தன்மை குறைபாட்டுக்கு வழிவகுக்கும் என்று சொல்லப்படுகிறது. சான்சோன் தலைமையிலான இத்தாலிய கணக்கெடுப்பில் கோவிட் இருந்தவர்களிடையே பலரிடமும் விறைப்புத்தன்மை  குறைபாடு இருப்பது தெரியவந்துள்ளது' என்கிறார்.

Study: Erectile Dysfunction Is 5 Times More Likely in Men Who've Had COVID -19

.அதே போல  "அமெரிக்காவின் மியாமி, மில்லர் ஸ்கூல் ஆஃப் மெடிசினில் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், கொரோனாவிலிருந்து குணமடைந்து 7 மாதங்களுக்குப் பிறகும் ஆண்குறியில் தொற்றினால் தாக்கம் ஏற்படுவதாக தெரிகிறது. ரத்த நாளங்கள் செயலிழப்பு அதிகரிக்கும் ஆபத்து கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஆண்களில் விறைப்புத்தன்மையின்மையை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. என கூறப்பட்டுள்ளது. 

பொதுவாக இதய நோய்கள், இரத்த நாளங்கள் அடைப்பு , உயர் இரத்த அழுத்தம், கொழுப்பு, நீரிழிவு, உடல் பருமன், பதட்டம், மன அழுத்தம், மனச்சோர்வு மற்றும் புகைபிடித்தல் மற்றும் மது அருந்துதல் போன்ற வாழ்க்கை முறை பழக்கவழக்கங்கள் விறைப்புத்தன்மையின்மைக்கு  முக்கிய காரணங்களாக அமைவதாக நினைத்திருந்த நிலையில் தற்போது கொரோனாவும் ஒரு காரணியாக சேருகிற சூழல் ஏற்பட்டுள்ளது. 

ஆக,  கொரோனா பாதிப்புக்கு உள்ளாகும் ஆண்கள், மற்றும் பெண்கள் எண்ணிக்கையில் மாறுபாட்டை விட உள்ள பாதிப்பில் உள்ள மாறுபாடு அதிகம் உள்ளது.  ஆண்களுக்கு இது கூடுதலானா சோதனை காலம்.

English Summary

Is corona dangerous for manhood?

Latest Articles

KOLNews