KOLNews

அது நிரந்தரமானது அல்ல..! - ஆப்கானிஸ்தான் குறித்து பிரதமர் மோடி சூசகம் ..?

குஜராத்தில் காணொலி மூலம்புகழ்பெற்ற சோம்நாத் கோயிலில் சில திட்டங்களை  தொடங்கிவைத்து உரையாற்றிய பிரதமர் மோடி, சோம்நாத் கோயில் மீது பலமுறை தாக்குதல் நடத்தப்பட்டதை சுட்டிக்காட்டி ,  ஒவ்வொரு பாதிப்பிற்கு பின்பும் அக்கோயில் புத்தெழுச்சி பெற்றதாகவும் தெரிவித்தார் 

மேலும், பயங்கரவாதத்தின் துணையுடன் சாம்ராஜ்யங்களை நிறுவுபவர்கள் நிலைத்திருந்ததாக சரித்திரம் இல்லை என்றும் பயங்கரவாத மற்றும் அழிவு சகதிகள் சில நேரங்களில் ஆதிக்கம் செலுத்தினாலும் அவை நிரந்தரமானதாக இருக்காது , ஏனெனில் மனித இனத்தை எப்போதும் ஒடுக்கிவிட முடியாது என்று பிரதமர்  மோடி கூறினார 

அண்மையில், அகப்கானிஸ்தான அரசை தாலிபன்கள் கைப்பற்றிய நிலையில், தாலிபன்கள் குறித்து இந்தியா நேரடியாக விமர்சனங்கள் எதுவும் செய்யவில்லை என்றாலும் பிரதமரின் இந்த பேச்சு   முக்கியத்துவமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

English Summary

It is not permanent ..! - Prime Minister Modi's hint about Afghanistan ..?

Latest Articles

KOLNews