KOLNews

நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் கபில் தேவ்.!

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் சிறந்த ஆல்ரவுண்டருமான கபில்தேவ், நெஞ்சுவலி காரணமாக தில்லியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளார் அவருக்கு வயது 61.

கபில் தேவின் உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் தரப்பில், 'அதிகாலை ஒரு மணிக்கு நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற வந்தார் கபில்தேவ். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உடனடியாக அவருக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது, தற்போது அவருடைய உடல்நிலை சீராக உள்ளது. இன்னும் சில நாட்களில் வீடு திரும்புவார்' என தெரிவிக்கப்பட்டுள்ளது..

முன்னாள் டெஸ்ட் வீரரும் இந்திய கிரிக்கெட் வீரர்கள் சங்கத்தின் தலைவருமான அசோக் மல்ஹோத்ராவும்  கபில்தேவ் ஓரளவு தேறி வருவதாகவும் அவருடைய மனைவியுடன் பேசியதில்,  கபில்தேவ் நேற்று சிறிது உடல்நலக் குறைவுடன் இருந்துள்ளார் என்பது தெரியவந்ததாகவும், ருத்துவமனையில் அவருக்கு பரிசோதனைகள் நடைபெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, கபில்தேவ் விரைவில் குணமடைய வேண்டும் என விராட் கோலி, அணில் கும்லே,  கௌதம் கம்பீர், சுரேஷ் ரெய்னா உள்ளிட்ட கிரிக்கெட் பிரபலங்கள் ட்விட் செய்துள்ளனர்.

English Summary

Kapil Dev admitted to hospital due to chest pain

Latest Articles

KOLNews