KOLNews

பெண்களே..'அதில்' ஆர்வம் குறைகிறதா..?

பாலியல் பற்றியான செய்திகள், காட்சிகள் பார்வையில் பட அதிக வாய்ப்புள்ள இன்றைய நவீன உலகத்தில், அவற்றால் இளம்வயது பெண்கள்,  மன ரீதியான பாலியல் தூண்டுதளுக்கு ஆளாக நேரிடும் என எச்சரிப்பவர்கள் பலரை பார்த்து இருக்கிறோம். ஆனால், மறுபுறம் இளம் வயது மற்றும் நடுத்தர வயது பெண்களுக்கே பாலியல் அபிலாஷைகளை பூர்த்தி செய்துகொள்ள தேவையான ஆர்வமின்றி இருப்பதும் அதிகரித்து வருவதாக துறை நிபுணத்துவம் வாய்ந்தவர்கள் கூறுகிறார்கள். 

பெண்களுக்கு ஏற்படும் பாலியல் பிரச்சனைகள் பொதுவான பிரச்சனைகளில் ஒன்று தான், அது காலப்போக்கில் ஏற்ற இறக்கமாக உள்ளது.  ஆனால் உடலுறவில் ஆர்வமின்மைக்கு தீர்வு காண்பது சற்று சிரமமாகத்தான் உள்ளது.  

ஆர்வமின்மை என்பது ஆண்களிலும் பெண்களிலும் பொதுவான ஒன்று தான்.  2016 இல் நடந்த ஒரு ஆய்வு , உலகளவில் மாதவிடாய் நின்ற பெண்களில் சுமார் 40.9% பேர் குறைந்தது ஒரு வகையான பாலியல் செயலிழப்பை அனுபவிக்கிறார்கள் என்று தெரிவிக்கிறது.  ஆர்வம் குறைந்துள்ளது என்கிற உணர்வை பெரும் விழிப்புணர்ச்சியை கூட சிலர் பெறாமல் இருக்கின்றனர். 

What is female arousal disorder? Symptoms and treatment உடலுறவைப் பற்றிய சிந்தனையே வரவில்லை என்றால் உங்களுக்கு உடலுறவில் ஆர்வம் குறைந்துள்ளதாக  எடுத்துக்கொள்ளலாம்.  பாலுறவின் போது எதிர்பார்த்த இன்பம் இல்லாமை , பிறப்புறுப்புகளில் உணர்வு அற்ற தன்மை போன்றவை காரணமாக இருந்தால் கூட நீங்கள் ஒரு மருத்துவரை பார்க்க வேண்டும் என்று அர்த்தம். 

ஒரு நபர் அனுபவிக்கும் பாலியல் ஆசையின் அளவு மற்றும் வகை மற்றும் அந்தரங்கம் மற்றும் பாலியல் செயல்பாடுகளுக்கு அவரது உடல் எவ்வாறு பதிலளிக்கிறது என்பது முக்கியம்..  பாலியல் சீர்குலைவு பிரச்சனை ஏற்படுவதற்கு  மனநல கோளாறுகள், பிறரின் ஆதிக்க உணர்வால் பாதிக்கப்படுவது , மருந்து, போதைப்பொருள் ,என பல காரணங்கள் இருக்கலாம்.

குறிப்பாக அதிருப்தியான ஒரு உறவில் ஏற்படும் பிரச்சனைகள், பெண்களின் பாலியல் செயலிழப்புக்கான ஆபத்தான காரணியாகும். இணையுடன் சரியான புரிதல் இல்லாமை, உணர்ச்சி நெருக்கம் இல்லாமை மற்றும் இணையுடன் தொடர் சண்டை சச்சரவு . அல்லது இணையின் மன மற்றும் உடல் ஆரோக்கியமும் உடலுறவில் ஆர்வமின்மையை ஏற்படுத்தும்.  

What is female arousal disorder? Symptoms and treatmentஇணையின் மன ஆரோக்கியம் என்பது அவரின்  தன்னம்பிக்கை இல்லாமையால் பாதிக்கப்படலாம், அதன் ஏற்பட்ட விரக்தி உங்களின் ஆர்வத்தை குறைக்கலாம். ஆகவே அதற்கான விழிப்புணர்ச்சியை அவர் பெற அவரை எவ்வித தாழ்வு மனப்பான்மைக்கு ஆளாகாதவாறு பார்த்துக்கொள்ளவேண்டும். சில நேரங்களில், மன அழுத்தம், பதட்டம் மற்றும் மனச்சோர்வு ஆகியவை உடலுறவுக்கான விருப்பத்தை குறைக்கலாம்.  

அதே போல குழந்தை பருவத்தில் ஏற்பட்ட சில அருவெறுப்பான சம்பவங்களின் தாக்கம் கூட பாலியல் செயலிழப்புக்கு பங்களிக்கக்கூடும் என்று ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. 

Treating Desire, Arousal Problems in Women Triggers Debate | Everyday Health உடலுறவைச் சுற்றியுள்ள எதிர்மறை நம்பிக்கைகள் பாலினத்தைப் பற்றி பல நம்பிக்கைகள் உள்ளன, அவை முற்றிலும் சரியானவை அல்ல, அவை தனிப்பட்ட, கலாச்சார அல்லது மத நம்பிக்கைகளாக இருக்கலாம், பாரம்பரிய பாலியல் கற்பிதங்களை  நம்புபவர்கள், தாங்கள் உடலுறவின் போது குறிப்பிட்ட சில செயல்களில் பங்கு வகிக்கக் கூடாது என்று நினைக்கலாம், அதனால் அவர்களால் அந்த நெருக்கத்தை அனுபவிக்க முடியவில்லை.  உடலுறவு கொள்ளும்போது அவமானம் என்ற ஒன்றும் இல்லை என்பதை புரிந்து கொள்ளவேண்டும். 

எது எப்படியிருப்பினும், தாம்பத்திய உறவில் ஈடுபட  வெறுக்கும் வகையிலான, இது போன்ற சிக்கலான அறிகுறிகளை நீங்கள் உணரும் போதெல்லாம் மருத்துவரை அணுகவும்.  சரியான முறையில் கண்டறியப்பட்டால் பெண்களின் பாலின பிரச்சனைகளை குணப்படுத்த முடியும்.  ஆனால் நீங்கள் வெட்கப்படாமல் மருத்துவரை அணுக வேண்டும் என்பதே மிக முக்கியமானதும், முதன்மையானதுமாகும்.

English Summary

Ladies .. is the interest in 'that' decreasing ..?

Latest Articles

KOLNews