KOLNews

கடித போக்குவரத்து நிறுத்தம் - பாகிஸ்தானின் தடாலடி முடிவு

பாகிஸ்தான் அரசு இந்தியாவுடனான கடித போக்குவரத்தை தீடீரென நிறுத்தி உள்ளது. இந்தியாவிற்கு  வரும் / செல்லும்  கடித போக்குவரத்தை நிறுத்துவதாக பாக்கிஸ்தான் தெரிவித்துள்ளது.

காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்தை தந்த 370 சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்ட பிறகு இந்தியா-பாக்., இடையே பதற்றம் நிலையே காணப்படுகிறது. இதுவரை அவ்வப்போது போர் ஏற்படும் சூழல் கூட ஏற்பட்டுவருகிறது. 

இந்நிலையில் ஆக.,27 ம் தேதி தங்கள் நாட்டிற்கு கடிதங்கள் அனுப்பப்படுவதை நிறுத்தும்படி இந்தியாவை பாக்கிஸ்தான் வலியுறுத்தியது . 

இது பற்றி தபால் சேவை துறை இயக்குனர் ஆர்.வி.சவுத்ரி கூறுகையில், 

பாக்கிஸ்தானின் இந்த முடிவு தவறானது. இது போன்ற நடவடிக்கையை பாகிஸ்தான் மேற்கொள்வது இதுவே முதல் முறை. இந்த உத்தரவை பாக்கிஸ்தான் எப்போது விலக்கிக் கொள்ளும் என தெரியவில்லை என்றார்.

இந்தியாவில்  28 வெளிநாட்டு தபால் அலுவலகங்கள் உள்ளன. இதில் குறிப்பாக பாகிஸ்தான் உடனான தபால் சேவைகள் டில்லி மற்றும் மும்பையில் உள்ள அலுவலகங்களில் இருந்து இயக்கப்படுகின்றன. நாட்டின் பிற மாநிலங்கள் இருந்து பெறப்படும் பாக்கிஸ்தானுக்கு போக வேண்டிய கடிதங்கள் டில்லி அலுவலகத்தால் நிர்வகிக்கப்படுகிறது. அதே சமயம் காஷ்மீரில் இருந்து பாக்கிஸ்தானுக்கு அனுப்பப்படும் தபால் சேவை மும்பை அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. 

மேலும்,  பாக்கிஸ்தானுக்கு செல்லும் கடிதங்கள் பெரும்பாலும் பஞ்சாப் மற்றும் காஷ்மீரில் இருந்தே அனுப்பப்படும். அவை பெரும்பாலானவை கல்வி  தொடர்பானதாகவே இருக்கும் என்றார்.

ஒரு சில நாட்களுக்கு முன் காஷ்மீரில் குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து பாக்., ராணுவம் தாக்கியதால், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பபயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்தியா தாக்கியது. இதில் சுமார் 35 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். 

இதன் காரணமாகவே  இந்தியாவுடனான தபால் போக்குவரத்தை உடனடியாக நிறுத்தும் பாக்கிஸ்தான் முடிவெடுத்திருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.

English Summary

Letter traffic stop - Pakistan decision

Latest Articles

KOLNews