KOLNews

மீண்டும் 'மெசேஜ்' சேவை முடக்கப்பட்டது..! - அரைகுறை தகவல் தொடர்பில் காஷ்மீர்

சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட ஜம்மு-காஷ்மீரில் போஸ்ட்பெய்டு செல்போன் சேவைகள் 72 நாள்களுக்குப் பிறகு திங்கள்கிழமை மீண்டும் வழங்கப்பட்டது.

இந் நிலையில் தற்போது குறுந்தகவல் (எஸ்எம்எஸ்) அனுப்பும் சேவைகள் மீண்டும் முடக்கப்பட்டுள்ளன.

அங்கு கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி முதல் செல்லிடப்பேசி சேவைகள் முடக்கப்பட்டிருந்தநிலையில் செல்போன்  சேவைகள் திங்கள்கிழமை நண்பகல் 12 மணி முதல் மீண்டும் தொடங்கப்பட்டன. இருப்பினும் இணையதளச் சேவைகள் முடக்கப்பட்ட நிலையே தொடர்ந்தது.

Image result for kashmir communication

இருப்பினும் , செல்போன் மூலம் அழைப்பு மேற்கொள்ளவும், குறுந்தகவல் அனுப்பவும் முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்திருந்தனா். இந்நிலையில், திங்கள்கிழமை மாலை 5 மணியளவில் குறுந்தகவல் சேவைகள் முடக்கப்பட்டன. இதனால் மக்கள் கடும் அதிருப்திக்கு உள்ளாகியுள்ளனர்.

இது  குறித்து அதிகாரிகளிடம் கேட்டால்,  இது ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மட்டுமே என கூறி பிற விவரங்களை கூறாமல் போகும் போக்கே அங்கு உள்ளதாக சொல்லப்படுகிறது.

செல்போன் சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டதால், போஸ்ட்பெய்டு சேவைகளுக்கான கட்டணத்தை செலுத்த தொலைத்தொடா்பு நிறுவனங்களின் அலுவலகங்களில் திங்கள்கிழமையும், செவ்வாய்க்கிழமையும் அதிக கூட்டம் காணப்பட்டது. இருப்பினும் இணையதளச் சேவைகள் தொடா்ந்து முடக்கப்பட்டுள்ளதால், இணையவழியில் கட்டணத்தைச் செலுத்த முடியாத சூழலே உள்ளது.

English Summary

'Message' service disabled again! - Kashmir in semi-communication

Latest Articles

KOLNews