KOLNews

பெயர் சூட்டுவதால் உண்மையை மாற்ற முடியாது..! - சீனாவுக்கு இந்தியா பதிலடி

இந்தியாவின் அருணாச்சல பிரதேச மாநிலத்தின் சில பகுதிகளுக்கு சீன அரசு புதிய பெயர்களை சூட்டியுள்ளதுடன், லடாக்கின் பான்காங் ஏரிப் பகுதியில் புதிதாக பாலம் ஒன்றையும் கட்டி வருகிறது . 

இந்நிலையில் நேற்றைய முன் தினம், டெல்லியில் இதுகுறித்து மத்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சி இந்தியாவின் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

அவர் பேசுகையில்,  'அருணாச்சல பிரதேசத்தின் சில பகுதிகளுக்கு சீனா பெயர் சூட்டியிருப்பதாக கடந்த வாரம் தகவல்கள் வெளியாகின . இது குறித்து சீனாவிடம் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளோம் . அருணாச்சல பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி . அந்த மாநிலத்தின் பகுதிகளுக்கு புதிய பெயர் சூட்டுவதால் எதுவும் நடக்காது . உண்மையை மாற்ற முடியாது . லடாக்கின் பான்காங் ஏரிப் பகுதியில் சீன ராணுவம் புதிய பாலத்தை கட்டி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன . இந்த விவகாரத்தை உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம் . சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு சட்டவிரோதமாக கைப்பற்றிய இடத்தில் சீனா பாலம் கட்டுவதாக கூறப்படுகிறது . இதை இந்தியா ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது . சீனாவின் நடவடிக்கை நகைப்புக்குரியதாக உள்ளது . இந்திய மக்கள் பிரதிநிதிகளுக்கு எதிராக சீனா கருத்து தெரிவிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது', என தெரிவித்தார்.

English Summary

Naming does not change the truth ..! - India retaliates against China

Latest Articles

KOLNews