KOLNews

நீட் தேர்வு ..! - உண்மை நிலையை உணர்த்துகிறதா ஜெய்ப்பூர் சம்பவம்..?

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நீட் தேர்வின் போது நடைபெற்றுள்ள முறைகேடுகள் அத்தேர்வின் நம்பகத்தன்மையை கேள்விக்குறியாகியுள்ளது. 

முன்னதாக, கடந்த 12 - ம் தேதி  ஜெய்பூரில் உள்ள நீட் தேர்வு மையம் ஒன்றில், தேர்வு கண்காணிப்பாளர் வினாத்தாளை வாட்ஸ் அப் மூலம் வெளி நபர்களுக்கு அனுப்பி விடைகளை பெற்று ஒரு மாணவிக்கு உதவியுள்ளார் . இவ்விஷயம் வெளிச்சத்திற்கு வந்ததையடுத்து, மாணவி உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் . 

அங்கு நீட் தேர்வு மையத்தில் ஒன்றான ராஜஸ்தான் பொறியியல் கல்லூரிதேர்வு மைய கண்காணிப்பாளர்களில் ஒருவரான ராம் சிங் மற்றும் தேர்வு மைய பொறுப்பாளர் முகேஷ் ஆகியோர்   மொபைல் போனில் வினாத்தாளை புகைப்படம் எடுத்து, சித்ரகூட் பகுதியில் உள்ள இருவருக்கு அனுப்பியுள்ளனர் . அவர்கள் அதனை சிகார் பகுதியிலுள்ள சிலருக்கு அனுப்பி விடைகளை பெற்று மீண்டும் ராம் சிங்கிற்கு அனுப்பியுள்ளனர் . அதனை கொண்டு அவர் சரியான விடைகளை  தினேஷ்வரி குமாரி என்கிற தேர்வருக்கு வழங்கியுள்ளார் . இத்தகவல் கசிந்து ஜெய்பூர் போலீசார் இம்மோசடியில் சம்பந்தப்பட்ட மாணவி உட்பட 8 பேரை கைது செய்துள்ளனர்.

மேலும், இதில் நீட் கோச்சிங் சென்டர் ஒன்றும் இடைத்தரகராக செயல்பட்டு . இந்த பணியை முடித்துத் தர தேர்வு கண்காணிப்பாளருக்கு ரூ .30 லட்சம் பேரம் பேசியுள்ள்ளார், இதில்,முதல் தவனையாக ரூ .10 லட்சத்துடன் தேர்வு மையத்திற்கு வெளியே காத்திருந்த மாணவியின் மாமாவும் கைது செய்யப்பட்டுள்ளார் 

தமிழகம் போன்ற மாநிலங்களில் மாணவர்களின் கம்மல் , சங்கிலி , மெட்டியை கூட கழட்டி விட்டு தேர்வு எழுத அனுப்பும் நிலையில் , அங்கு செல்போன் வைத்துக்கொள்ள அனுமதித்து இருப்பது எந்த வகையான திட்டமிடல் என கேள்வி எழுந்துள்ளது. 

English Summary

NEET Exam .! - Does the Jaipur incident convey the truth?

Latest Articles

KOLNews