KOLNews

நடிகர் 'சோனு சூட்' க்கு கிடைத்த புதிய கௌரவம்..!

நடிகர் சோனு சூட், பஞ்சாபை சேர்ந்த இவர் தென்னிந்திய படங்களில் பல குணசித்ர பாத்திரங்களை ஏற்று புகழ் பெற்றவர். நடிகை அனுஷ்கா நடிப்பில் வெளியான அருந்ததி திரைப்படத்தில் வில்லனாக நடித்தது ரசிகர்களுக்கு நினைவிருக்கலாம். 

 இந்நிலையில், பஞ்சாபின் மாநில அடையாள சின்னமாக நடிகர் சோனு சூட் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இயல்பாகவே இறக்க சுபாவம் கொண்ட சோனு சூட், கொரோனா ஊரடங்கின் போது புலம்பெயர் தொழிலாளர்கள், தங்களது சொந்த ஊருக்கு திரும்புவதற்கு உதவி புரிந்தார். நாட்டின் பல்வேறு இடங்களில் சிக்கி கொண்ட புலம்பெயர்ந்தோருக்கு வாகன வசதிகளை செய்து கொடுத்துடன் மனிதநேயத்துடன் அவர்களுக்கு பல உதவிகளை செய்தார். இது சமூக ஊடகங்களில் பெருமளவு பரவி அவருக்கு  நாடு முழுவதும் இருந்து பாராட்டுக்கள் குவிந்தது. 

இந்நிலையில்,இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு, பஞ்சாப் தலைமை தேர்தல் அதிகாரி திரு. கருணா ராஜூ,  அனுப்பிய பரிந்துரையின் அடிப்படையில், பஞ்சாபின் மாநில அடையாள சின்னமாக நடிகர் சோனு சூட் நியமிக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

English Summary

New honor for actor 'Sonu Sood' ..!

Latest Articles

KOLNews