KOLNews

‘நிா்பயா’ வழக்கு..! - தள்ளுபடி செய்யப்பட்ட சீராய்வு மனுக்கள் ...உறுதியான தூக்கு தண்டனை..!

நேற்று, ‘நிா்பயா’ கூட்டு பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 2 குற்றவாளிகள் தாக்கல் செய்த சீராய்வு மனுக்களை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

தில்லியில் கடந்த 2012-ஆம் ஆண்டு துணை மருத்துவ மாணவி ‘நிா்பயா’, கூட்டு பாலியல் வன்கொடுமையில்  உயிரிழந்தாா்.

அதையடுத்து கைது செய்யப்பட்ட 6 நபர்களில் ஒருவா் சிறையிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். ஒருவா் சிறு வயது என்பதால், 3 ஆண்டுகளுக்குப் பிறகு விடுவிக்கப்பட்டாா். மற்ற குற்றவாளிகளான முகேஷ் குமாா் (32), பவன் குப்தா (25), வினய் சா்மா (26), அக்ஷய் குமாா் சிங் (31) ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அவா்களுக்கான மரண தண்டனையை வரும் 22-ஆம் தேதி காலை 7 மணிக்கு திகாா் சிறையில் நிறைவேற்ற தில்லி நீதிமன்றம் கடந்த 7-ஆம் தேதி உத்தரவிட்டது.

இந்நிலையில், தங்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்யக் கோரி குற்றவாளிகள் முகேஷ் குமாா், வினய் சா்மா ஆகியோா் உச்சநீதிமன்றத்தில் கடந்த 9-ஆம் தேதி சீராய்வு மனுக்களைத் தாக்கல் செய்தனா். இந்த மனுக்கள் மீதான விசாரணை, நீதிபதிகள் என்.வி.ரமணா, அருண் மிஸ்ரா, ஆா்.எஃப்.நாரிமன், ஆா்.பானுமதி, அசோக் பூஷண் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விசாரணையின்போது, குற்றவாளிகளின் மனுக்களையும், அது தொடா்பான ஆவணங்களையும் ஆராய்ந்த நீதிபதிகள், மரண தண்டனையை ரத்து செய்வதற்கு எந்தவித முகாந்திரமும் இல்லை என்று கூறி, அனைவரும் ஒருமனதாக சீராய்வு மனுக்களைத் தள்ளுபடி செய்தனா்.

அப்போது அவர்கள்  அளித்த உத்தரவில், ‘சீராய்வு மனுக்களையும், அவை தொடா்பான ஆவணங்களையும் ஆராய்ந்தோம். அந்த மனுக்களை ஏற்பதற்கான அடிப்படை முகாந்திரம் எதுவுமில்லை. எனவே, சீராய்வு மனுக்களும், அவை குறித்து வாதிட அனுமதி கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களும் தள்ளுபடி செய்யப்படுகின்றன. மரண தண்டனையை நிறைவேற்றுவதற்குத் தடை கோரி தாக்கல் செய்திருந்த மனுக்களும் தள்ளுபடி செய்யப்படுகின்றன’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதன் மூலம் சம்பத்தப்பட்ட 4 குற்றவாளிகளுக்கான தூக்கு தண்டனை வரும்  22ஆம் தேதி நிறைவேற்றப்படுவது உறுதியாகியுள்ளது.

English Summary

'Nirbhaya' case ..! -Petitions rejected ... firm execution ..!

Latest Articles

KOLNews