KOLNews

அரசு ஊழியர்களுக்கு நவம்பர் 30 வரை விடுமுறை கிடையாது! - அயோத்தி வழக்கு காரணமா ?

உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள பல மாவட்டங்களில் பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கு வருகிற நவம்பர் 30ம் தேதி வரை விடுமுறை வழங்கப்படாது என்று அம்மாநில அரசு அதிரடி உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக அம்மாநில அரசின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்டுள்ள தகவலின்படி,

 'உத்தரப் பிரதேச மாநிலத்தில் அரசு அதிகாரிகளுக்கு வருகிற நவம்பர் 30ம் தேதி வரை விடுமுறை வழங்கப்படமாட்டாது. வரும் நவம்பர் 30ம் தேதி வரை விடுப்புக்கு யாரேனும் விண்ணப்பித்திருந்தால் அதனை உயர் அதிகாரிகள் ரத்து செய்ய வேண்டும். மிக அவசர காலத் தேவைக்காக மட்டும் வேண்டுமானால் உயர் அதிகாரியிடம் அனுமதி பெற்று விடுப்பு எடுத்துக்கொள்ளலாம்.

மேலும், அரசு அதிகாரிகள் அனைவரும் தாங்கள் பணிபுரியும் மாவட்டங்களிலேயே இருக்க வேண்டும். வேறு இடங்களுக்கு பயணம் மேற்கொள்ளக் கூடாது. பண்டிகைக் காலத்தை முன்னிட்டும், அயோத்தி வழக்கில் விரைவில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கவுள்ளதை அடுத்தும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

English Summary

No public holidays until November 30! - The Ayodhya case?

Latest Articles

KOLNews