KOLNews

காஷ்மீர் விவகாரத்தை பின்னுக்கு தள்ளிய வெங்காயம்..!

வெங்காயத்தின் விலை  ஒரு கிலோவுக்கு ரூ .60 முதல் ரூ .100 வரை உயர்ந்து வரும் நிலையில், அதனை கட்டுக்குள் கொண்டு வரும்  முயற்சியாக மோடி அரசு, துருக்கியில் இருந்து 11,000 மெட்ரிக் டன் வெங்காயத்தை இறக்குமதி செய்ய உள்ளது.

முன்னதாக, துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகன், காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானை ஆதரித்து செப்டம்பர் மாதம் ஐக்கிய நாடுகள் சபையில் பிரச்சினையை எழுப்பினார். அதனையடுத்து, இந்தியாவுக்கும் துருக்கிக்கும் இடையிலான உறவு மோசமடைந்தது,

Image result for turkish president on kashmir issue

அதைத்தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி தனது துருக்கி பயணத்தை ஒத்திவைத்த நிலையில், இந்த ஆண்டு தொடக்கத்தில் துருக்கியின் அனடோலு கப்பல் கட்டடத்திற்கு வழங்கப்பட்ட 2.3 பில்லியன் டாலர் டெண்டரை ரத்து செய்வதாக அச்சுறுத்தியது. அதற்கு இந்தியாவும் தனது கடுமையை வெளிப்படுத்தியது.

ஆனால் தற்போது வெங்காயத்தின் விலை ஏற்றம், துருக்கி மீதான மனஸ்தாபங்களை பின்னுக்கு தள்ளி, 11,000 மெட்ரிக் டன் வெங்காயத்தை இறக்குமதி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டது.

Image result for onion import from turkey

"துருக்கியில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 11,000 மெட்ரிக் டன்களில், 5,500 மெட்ரிக் டன் சிவப்பு வெங்காயமாக இருக்கும், அவை பெரும்பாலும் இந்தியாவில் நுகர்வுக்கு பயன்படுத்தப்படுகின்றன, மீதமுள்ள 5,500 மெட்ரிக் டன் மஞ்சள் வெங்காயம் இருக்கும்" என்று அதிகாரிகள் தரப்பில் சொல்லப்படுகிறது.

தற்போது வெங்காயம் துருக்கியில் இருந்து கப்பல் ஜனவரி 7 ஆம் தேதி வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன், துருக்கியைத் தவிர, இந்தியா எகிப்து மற்றும் நெதர்லாந்தில் இருந்து வெங்காயத்தையும் வாங்குகிறது. இந்தியா 6,090 மெட்ரிக் டன் வெங்காயத்தை எகிப்திலிருந்து இறக்குமதி செய்யும் அதே வேளையில் 5,000 மெட்ரிக் டன் நெதர்லாந்தில் இருந்து கொள்முதல் செய்யும்.

எகிப்திலிருந்து இறக்குமதி செய்யப்படும் 1,160 மெட்ரிக் டன் வெங்காயத்தின் முதல் தொகுதி டிசம்பர் 12 ஆம் தேதி மும்பையின் ஜவஹர்லால் நேரு துறைமுகத்திற்கு வந்து சேரும்.

எகிப்திலிருந்து மீதமுள்ள மூன்று சரக்குகள் முறையே 17, 24 மற்றும் 31 தேதிகளில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது."

வெங்காயத்தை பொறுத்தவரையில் ஆந்திராவின் தேவை மிக அதிகம். இது வாரத்திற்கு 1,050 மெட்ரிக் டன் வெங்காயத்தைக் கேட்டுள்ளது. மேற்கு வங்கம் வாரத்திற்கு 300 மெட்ரிக் டன், ஒடிசா 100 மெட்ரிக் மற்றும் கேரளா 40 மெட்ரிக் டன் கோரியுள்ளது குறிப்பிடத்தக்கது.

English Summary

Onion makes Kashmir issue to get aside..!

Latest Articles

KOLNews