KOLNews

ஆயத்தம் ஆகும் ஆக்ஸ்போர்டு தடுப்பூசி..! - ஏப்ரல் முதல் கிடைக்கும் , ஆனால்..?

சீரம் இன்ஸ்டியூட் ஆப் இந்தியா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி அதார் பூனாவாலா, கொரோனாவுக்கான தடுப்பூசி அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்துக்குள் மக்களுக்குக் கிடைத்து விடும் என்று தெரிவித்துள்ளார்.

 ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகமும் பிரிட்டனின் ஆட்சி நீக்க மருந்து தயாரிப்பு நிறுவனமும் இணைந்து உருவாக்க உள்ள கொரோனாவுக்கான  தடுப்பூசியை இந்தியாவில் தயாரிக்கும் அனுமதியை  சீரம் இன்ஸ்டியூட் ஆப் இந்தியா நிறுவனம்  பெற்றுள்ளது 

COVID-19 vaccine in market by Sep-Oct 2020 if trials succeed: Poonawalla -  The Week

இந்நிலையில், இந்த நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி அதார் பூனாவாலா இதுகுறித்து வியாழக்கிழமை கூறுகையில், 

"முதலாவதாக மருத்துவ பணியாளர்கள் முதியவர்களுக்கு வரும் பிப்ரவரிக்குள் கொரோனா தடுப்பூசி கிடைத்துவிடும்.  அதைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு வரும் ஏப்ரல் மாதத்துக்குள் கொரோனா தடுப்பூசி கிடைத்துவிடும். 

இருப்பினும்  நாட்டு மக்கள் அனைவருக்கும் இவ்வூசி  கிடைப்பதற்கு இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் கூட ஆகலாம்.  தடுப்பூசி தயாரிப்பு, மற்றும்  அவற்றை அனைத்து இடங்களுக்கும் கொண்டு சேர்ப்பது,  மக்களுக்கு வினியோகிப்பது போன்றவற்றில் கால தாமதம் ஏற்படலாம்.  அத்துடன்,  தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு மக்களுக்கும் விருப்பம் இருக்க வேண்டும். ஆகவே தோராயமாக வரும் 2020ஆம் ஆண்டுக்குள் அனைவருக்கும் கொரோனா  தடுப்பூசி கிடைத்துவிடும்.  இரண்டு வேளை தடுப்பு மருந்தின் விலை ரூபாய் 1000 மாக இருக்கும்" என்ற அதார் பூனாவாலா, இறுதியில், இந்த தடுப்பூசி எவ்வளவு காலம் பாதுகாப்பு அளிக்கும் என்பதற்கு காலம் தான் பதில் சொல்லும் என்று தெரிவித்தார்.

English Summary

Oxford vaccine is getting ready ..! - Available from April, but ..?

Latest Articles

KOLNews