KOLNews

உலக பல்கலைக்கழக தரவரிசையில் இடம்பெற்ற 3 இந்திய பல்கலைக்கழகங்களுக்கு பிரதமர் மோதி வாழ்த்து..!

உலகெங்கும் உள்ள உயர்படிப்புகள் தொடர்பான தகவல்களையும் , வேலைவாய்ப்பு குறித்த தகவல்களையும் வழங்கும் புகழ்பெற்ற நிறுவனமான குவாக்கரெல்லி சைமண்ட்ஸ்,  உலகம் முழுவதுமுள்ள பல்கலைக்கழகங்களை மதிப்பிட்டு , தரவரிசை பட்டியலை வெளியிட்டு வருகிறது .அந்த வகையில் தற்போது உலகப் பல்கலைக்கழக தரவரிசை -2022 ஐ வெளியிட்டுள்ளது , 

இந்த தரவரிசையில் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்ட  1,300 பல்கலைக் கழகங்களில்,முதல் 200 இடங்களுக்குள் மூன்று இந்தியப் பல்கலைக்கழகங்கள் வந்துள்ளன . இந்த தரவரிசையில் ஐ.ஐ.டி. பம்பாய் 177 வது இடத்தையும் , ஐ.ஐ.டி. டெல்லி 185 வது இடத்தையும் , ஐ.ஐ.எஸ்.சி. பெங்களூரு 186 வது இடத்தையும் பிடித்துள்ளன . 

அதே போல, உலக அளவில் சிறந்த ஆராய்ச்சி பல்கலைக்கழகமாக , ஐ.ஐ.எஸ்.சி. பெங்களூரு மதிப்பிடப்பட்டுள்ளது. 

இந்நிலையில், பிரதமர் மோடி, குவாக்கரெல்லி சைமண்ட்ஸ்  உலகப் பல்கலைக்கழக தரவரிசையில் முதல் 200 இடங்களுக்குள் இடம் பெற்ற இந்தியப் பல்கலைக்கழகங்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் . இது குறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில் , " ஐ.ஐ.எஸ்.சி. பெங்களூரு , ஐ.ஐ.டி. பம்பாய் மற்றும் ஐ.ஐ.டி டெல்லிக்கு வாழ்த்துகள் இன்னும் அதிக எண்ணிக்கையிலான இந்தியப் பல்கலைக் கழகங்களும் கல்வி நிறுவனங்களும் உலகளாவிய சிறப்பை பெறுவதை உறுதி செய்யவும் . இளைஞர்களிடையே அறிவுசார் வலிமையை ஆதரிக்கவும் முயற்சிகள் நடந்து வருகின்றன" என குறிப்பிட்டுள்ளார் பிரதமர்.

English Summary

PM Modi congratulates 3 Indian universities in world university rankings ..!

Latest Articles

KOLNews