KOLNews

பிரதமர் மோடி ..நம்பர் ஒன்.! - பின்னுக்கு தள்ளப்பட்ட உலக தலைவர்கள்

உலகெங்கிலும் உள்ள தலைவர்களின் பிரபலம் குறித்து ' தி மார்னிங் கன்சல்ட் ' என்கிற ஊடகம் நடத்திய ஆய்வில் ,  70 சதவீதம் பேர் பிரதமர் மோடியை பிரபலமான தலைவராக தேர்ந்தெடுத்துள்ளனர் . 

இந்த ஆய்வில், ஆஸ்திரேலியா , பிரேசில் , கனடா , பிரான்ஸ் , இந்தியா , ஜெர்மனி , இத்தாலி , ஜப்பான் , மெக்சிகோ , தென்கொரியா , ஸ்பெயின் , அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் 13 அரசியல் தலைவர்கள் இந்த பட்டியலில் இடம் பிடித்தனர் . இதில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் , ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கல் , பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் மற்றும் பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ ஆகியோரும்  இடம்பெற்றிந்தனர்.

 இந்த கணக்கெடுப்பில் சுமார் 70 சதவிகித மக்கள் இந்திய பிரதமர் மோடியை பிரபலமான தலைவராக தேர்ந்தெடுத்துள்ளனர் . இதில் இந்திய பிரதமர் மோடி 70 சதவீதமும் , மெக்சிகோ அதிபர் ஆண்ட்ரஸ் மானுவல் லோபஸ் ஒப்ரடோர் 64 சதவீதமும் இத்தாலிய பிரதமர் மரியோ டிராகி 63 சதவீதமும் ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கல் 52 சதவீதமும் அமெரிக்க அதிபர் ஜோபைடன் 48 சதவீதம் பெற்று 5 வது இடத்திலும் உள்ளனர் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் 48 சதவீதமும் கனடா பிரதமர் கஸ்டின் ட்ரூடோ 45 சதவீதமும் பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ 39 சதவீதமும் தென் கொரிய அதிபர் மூன் ஜே - இன் 38 சதவீதமும் ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் 35 சதவீதமும் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோன் 34 சதவீதமும் ஜப்பான் பிரதமர் யோஷிலைட்சுகா 25சதவீதமும் பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.

English Summary

Prime Minister Modi ..Number One.! - World leaders Lagging behind

Latest Articles

KOLNews