KOLNews

பெருமை மிகு மில்கா சிங் காலமானார்..!

இந்திய தடகள விளையாட்டின் முன்னோடி, மில்கா சிங் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சண்டிகரில் உள்ள தனியார் மருத்துவனமனை ஒன்றில் சிகிச்சை பெற்றுவந்தார்.,  இந்நிலையில் இன்று அவர் சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 91.

முன்னதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இவரது மனைவி நிர்மல் கவுர், கடந்த ஜூன் 13ஆம் தேதி அன்று காலமான நிலையில், தற்போது மில்காசிங்கும் இறந்துள்ளது அவர்கள் குடும்பத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

1960 இல் ரோமில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் 400மீட்டர் ஓட்டத்தில், 45.73 வினாடிகளில் இலக்கை கடந்து 4வதாக வந்தார். அதன் பின் 40 வருடங்களாக இந்த சாதனை இந்தியளவில் முறியடிக்கப்படாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது. அதே போல 5 முறை ஆசிய போட்டிகளில் தங்க பதக்கம் வென்றுள்ளார்.

பல இளைஞர்களுக்கு தடகள போட்டிகளில் ஆர்வம் ஏற்பட காரணமாக இருந்த மில்கா சிங்கிற்கு மத்திய அரசு பத்ம விருது அளித்து கவுரவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

English Summary

Proudful Milkha Singh passes away ..!

Latest Articles

KOLNews