KOLNews

பிஎஸ்எல்வி சி-49 ராக்கெட்..! - இன்று விண்ணில்

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் ஆராய்ச்சி மையத்தின் முதலாவது ஏவுதளத்தில் இருந்து, புவி கண்காணிப்புக்குழுவுக்கான அதிநவீன இஓஎஸ்-1 செயற்கைகளுடன் பிஎஸ்எல்வி சி-49 ராக்கெட் இன்று விண்ணில் ஏவப்படுகிறது. சரியாக இன்று மாலை 3.0 ரெண்டு மணிக்கு செலுத்தப்பட உள்ளது. அதற்கான 26 மணி நேர கவுண்ட்டவுன் வெள்ளிக்கிழமை மதியம் 1.05 மணிக்கு தொடங்கியது. 

இந்த ஆய்வு மையத்திலிருந்து கடந்த ஆண்டு டிசம்பர் 11ம் தேதி ரிசார்ட் செயற்கைகோளை தாங்கியபடி பிஎஸ்எல்வி சி48 ராக்கெட் செலுத்தப்பட்டது நினைவிருக்கலாம் . இடையில் கொரோனா தாக்கம் காரணமாக ஆய்வு மையப் பணிகள் முடங்கியிருந்த நிலையில், அண்மையில் விண்வெளி ஆய்வுப் பணிகள் படிப்படியாக மீண்டும் தொடங்கப்பட்டு, தற்போது  பிஎஸ்எல்வி சி49 ராக்கெட் வடிவமைப்பு பணிகள் நிறைவடைந்து விண்ணில் செலுத்தப்படுகிறது.

பயன்பாடு  -  இதில் இடம் பெற்றுள்ள இந்தியா ஓசோன் செயற்கை கோளானது விவசாயம், பேரிடர் மேலாண்மை, காடுகள் கண்காணிப்பு ஆகிய பயன்பாட்டுக்காக அனுப்பப்பட உள்ளது.

சிறப்பம்சம் -  அந்த செயற்கை கோளில் உள்ள ரேடார் மூலம் அனைத்து பருவ நிலையிலும் துல்லியமாக படங்களை எடுக்க முடியும்.

மேலும், இந்த பிஎஸ்எல்வி சி49 ராக்கெட் மூலம், லித்துவேனியா நாட்டைச் சேர்ந்த ஒரு செயற்கைக்கோள், லக்சம்பர்க் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் தலா 4 செயற்கைகோள்கள்  என மொத்தம் 9 வெளிநாட்டு செயற்கைகோள்கள் விண்ணில் செலுத்தப்படுகின்றன. இந்த நிகழ்வு இஸ்ரோவின் அதிகார பூர்வ இணைய தளம் மற்றும் முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் நேரடியாக அது ஒளிபரப்பப்பட உள்ளது. 

 

English Summary

PSLV C-49 rocket ..! - In the sky today

Latest Articles

KOLNews