KOLNews

இன்று விண்ணுக்கு பாயும் பி.எஸ்.எல்.வி-சி47 .!

இன்று, பி.எஸ்.எல்.வி-சி47 ராக்கெட் , இந்தியாவின் காா்டோசாட் செயற்கைக்கோள் மற்றும் அமெரிக்காவின் 13 சிறிய ரக செயற்கைக்கோள்களை சுமந்தபடி விண்ணில் பாய்கிறது.

காலை 9.28 மணிக்கு, ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் விண்வெளி மையத்தின் இரண்டாவது ஏவுதளத்திலிருந்து ராக்கெட் விண்ணில் ஏவப்பட உள்ளது. 

செவ்வாய்க்கிழமை காலை 7.28 மணிக்கு இதற்கான 26 மணி நேர கவுன்ட்-டவுன் தொடங்கப்பட்டது.

இந்த மூன்றாம் தலைமுறை அதிநவீன காா்டோசாட்-3 செயற்கைக்கோள்,1,625 கிலோ எடை கொண்டது  , புவியிலிருந்து 509 கி.மீ. தொலைவிலான சுற்றுவட்டப் பாதையில் 97.5 கோணத்தில் நிலைநிறுத்தப்பட்டு அங்கிருந்தபடி, புவியைக் கண்காணிப்பதுடன் மிக துல்லிய புகைப் படத்தை எடுத்தனுப்பும் திறன் கொண்டது.

வானில் மேகக்கூட்டங்களை ஊடுருவி புவியைத் தெளிவாகப் படம் பிடிக்கும் என்பதும், இரவு நேரத்திலும் புவியை மிகத் தெளிவாகப் படம்பிடித்து அனுப்பும் திறன் கொண்டது என்பதும் இதன் சிறப்பம்சம் 

இந்த செயற்கைக்கோள். பேரிடா்கள் குறித்த முன்னெச்சரிக்கைக்கு மட்டுமின்றி, ராணுவ எல்லைப் பாதுகாப்புக்கும் இந்த செயற்கைக்கோள் உதவ உள்ளது. இது 5 ஆண்டுகள் செயல்பாட்டில் இருக்கும் எனவும் இஸ்ரோ சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த காா்டோசாட்-3 செயற்கைக்கோளுடன் அமெரிக்காவுக்கு சொந்தமான 13 சிறிய ரக செயற்கைக்கோள்களையும் பி.எஸ்.எல்.வி. சி-47 ராக்கெட் சுமந்து செல்கிறது.

English Summary

PSLV-C47 to be launched today

Latest Articles

KOLNews