KOLNews

தடுப்பூசி காப்புரிமையில் தளர்வு - இந்தியாவின் யோசனைக்கு உலக நாடுகள் ஆதரவு

அண்மையில், இந்தியாவும் , தென் ஆப்பிரிக்காவும் , கொரோனா அச்சத்திலிருந்து மீளும்வரை கொரோனாத் தடுப்பூசி மருந்துகள் மற்றும் பரிசோதனையின் காப்புரிமையில் தளர்வுகள் அளிக்க வேண்டுமென உலக வர்த்தக அமைப்பில் கோரிக்கை விடுத்திருந்தது..

இருப்பினும், இந்த கோரிக்கைக்கு ஆஸ்திரேலியா , கனடா , இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகள் வளர்ந்த நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. இந்நிலையில், கொரோனா தடுப்பூசிக்கான காப்புரிமையில் மட்டும் தளர்வுகள் அளிப்பதற்கு அமெரிக்க அதிபர் நோ பைடன ஆதரவு அளித்தார் .

இதற்கிடையே, ஜெனிவாவில் நடைபெற்று வரும் உலக வர்த்தக அமைப்பின் 2 நாள் கூட்டத்தில் , இந்தியாவின் கோரிக்கைக்கு 50 நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன இதனைத் தொடர்ந்து அடுத்த மாதம் 21 மற்றும் 22 - ம் தேதி நடைபெறவுள்ள உலக வரத்தக அமைப்பின அடுத்த கூட்டத்தில் , இது தொடர்பான அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது .

English Summary

Relaxation of vaccine patents - World nations support India's idea

Latest Articles

KOLNews