KOLNews

குழந்தைகளுக்கு ரெம்டிசிவிர் மருந்தா..? - கூடாது, என மத்திய அரசு அறிவுறுத்தல்

மத்திய அரசு, குழந்தைகளுக்கான கொரோனா சிசிச்சை தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது . அதில், ரெம்டிசிவிர மருந்தை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது . 

குறிப்பாக, குழந்தைகளின் இதயம் மற்றும் நுரையீரல் செயல்பாடுகளை கண்டறிய அவர்களை 6 நிமிடம் வரை நடக்க வைக்க வேண்டும் என்றும், அதனை பெற்றோர்கள் கண்காணிப்பில் செய்ய வேண்டும் என்றும்  தெரிவிக்கப்ட்டுள்ளது . ஆஸ்துமா பாதிப்புள்ள குழந்தைகளுக்கு இந்த சோதனை மேற்கொள்ள கூடாது என்ற எச்சரிக்கையையும் செய்துள்ளது. 

மேலும், சுயசிகிச்சை மேற்கொள்ள கூடாது,  ஸ்டீராய்டு மருந்தை பயன்படுத்த கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை தவிர,  5 வயது குட்பட்ட குழந்தைகளுக்கு முகக்கவசம் கட்டாயம் இல்லை என்றும் 6 முதல் 11 வயதுள்ள குழந்தைகள் அவர் திறனுக்கு ஏற்பட்ட முகக்கவசம் பயன்படுத்தலாம் என்றும் 12 வயதுக்கு மேற்பட்டவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

English Summary

Remdicivir medicine for children ..? - Should not, as instructed by the Central Government

Latest Articles

KOLNews